பக்கம்:நினைவுச்சரம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரம் 4}.

ஒரு மைல் தள்ளி இருக்குதே! என்பது அவர்களுக்கு ஒரு குறையாக இருந்தது. -

வெளியூரிலிருந்து வருகிறவர்கள் கூட இப்படி எண்ணு வதுதான் இயல்பாக இருந்தது. ஒரு சமயம் மன. பென. வை பார்க்க வந்து, அவரோடு ஆறு வரை நடந்து, நடந்த களைப்பினுல் மணலில் ஒய்வு எடுக்க வேண்டும் என்று நீட்டி நிமிர்ந்துவிட்ட நண்பர் ஒருவர் சொன்னர்- - -

‘எல்லாம் சரிதான். ஊரும் நல்லாத் தானிருக்கு. ஆறும் நல்லாயிருக்கு. இந்தச் சூழ்நிலையும் ஜோராகத் தானிருக்கு. ஆல்ை நீங்க ஒரு தப்பு செய்துட்டீங்க. ஊரை கொண்டு போயி ஆத்துக்கு ஒரு மைலுக்கு அப்பாலே வச்சி ருக்கீங்க. அது சரியில்லே. ஆற்ருேரமாகவே, கரை மேலே, அல்லது கொஞ்சம் தள்ளி ஊரை அமைச்சிருக்கணும்:

ஏதோ மயிலேறும் பெருமாள் பிள்ளைதான் கூட இருந்து பிளான் பண்ணி, ஊரை ஆத்திலேயிருந்து தள்ளிக் கொண்டு போய் அமைத்துவிட்டது.போல-அப்படிச் செய்து விட்டதற்காக அவரை குற்றம் சாட்டுகிற தொனியில்-அந்த நண்பர் பேசினர். -

அதை மன. பென. மறக்க முடிந்ததேயில்லே. இப்போது கூட அவருக்கு அந்த நினைவு எழுந்தது. மனம் சிரித்துக் கொண்டது.

'மனுசங்களோட மனம்தான் எப்படி எப்படி எல்லாம் வேலே செய்யுது பாரேன்!’ என்ருெரு எண்ணமும் வாலடித்தது. -

ஊரின் வடபுறம் குளம். அதை ஒட்டி உயர்ந்து செம்மை யாய் தெரியும் பரம்புப் பகுதி. அதற்கும் அப்பால் பனே மண்டைகள். மேலே கவிந்து விதானம் அமைத்திருக்கும் வானம். அதைப் பார்த்து விட்டு மேற்குப் பக்கம் திரும்பி, பார்வையை தென்திசையில் ஒட்டி, கீழ்பக்கம் பாய்ச்சினுல், எங்கும் பச்சைப் பசும் கடல். நெல்பயிரின் காடு. மரகதப் பச்சையாய் எல்லேயற்று விரிந்து பரந்து விளங்கும் அது

£5–108—fl-3 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/41&oldid=589285" இலிருந்து மீள்விக்கப்பட்டது