பக்கம்:நினைவுச்சரம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 நினைவுச்

கண்ணுக்குக் குளுமையான, மனசுக்கு இதமான-இயற்கை யின் சக்தியையும் மனித உழைப்பின் மாண்பையும் தெளிவு படுத்தும்-திருச்சன்னிதியாக அவருக்குத் தோன்றும்.

ஆகுல் ஒரு அம்மையார்-சமூக சேவை என்று நாமம் பூண்டு, சம்பளத்துக்காக ஊர் ஊராகச் சென்று ஏதோ சேவை பண்ணுவதாகப் பெயர் பண்ணித் திரிந்த ஒரு அம்மணி-ஒரு பஸ் நிலையத்தில் அவரை சந்திக்க நேர்ந்த போது, சிவபுரம் பற்றி அவர் பெருமையாய் குறிப்பிட்ட போது, அவரையே குறை கூறுகிற மாதிரிப் பேசிள்ை. -

  • சிவபுரமா? நல்ல ஊர்தான். ஆனாலும் ஊரை கொண்டு போயி இப்படியா வயலுகளே ஒட்டிவைப்பது? வயலுகளும் வீடு களும் ஒட்டிச் சேர்த்துவச்ச மாதிரி ! வீடுகளுக்கு அடுத்தாப் லேயே வயல்கள். ஊரை விட்டு வயலுக விலகித் தள்ளி இருக்கவேணும்? வயல் ஒரத்திலேயே வீடுகளும் முளேச்சிருக் கிறமாதிரி ஊரை வச்சிருக்கிறது.ஞலேதான் எப்பவும் கொசு உபத்திரவம் அதிகமாயிருக்கு என்ருள்.

ட எஞ்சிவனே என்று பெருமூச்செறிந்தது அவர் உள்ளம். அவள் கிட்டே என்ன பேச்சு வேண்டிக்கிடக்கு என்று சும்மா இருந்துவிட்டார்.

வயல்களில் பச்சைப் பசுமை கொலு இருக்காத கோடை யின் வறண்ட மாதங்களில் ஊரே விதவை வேஷம் போட்டுக் கொண்டிருப்பதுபோல் அவருக்குப்படும். அந்த வெறுமை அவர் நெஞ்சை உறுத்தும்.

அப்படி நெஞ்சைப் பெரிதாக உறுத்தக்கூடிய மகா வெறுமை வடக்கே பல்விளித்து எதிர்கொண்டு, வா ராசா வா, சொந்த ஊரை நெனச்சுக்கிட்டு வந்து சேர்ந்தியாக்கும்!” என்று எக்காளமிடுவதுபோல், மயிலேறும் பெருமாளேத் தாக்கு வதாகப்பட்டது, அவர் ஆற்றிலிருந்து திரும்பி நடந்துவந்த போது.

இனம் புரியாத வேதனை ஒன்று அவர் நெஞ்சைப் பற்றிப் யிருண்டுவதுபோல் வலி எடுத்தது. பாவிகளா! அட படு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/42&oldid=589286" இலிருந்து மீள்விக்கப்பட்டது