பக்கம்:நினைவுச்சரம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவிப் பயகளா ! இப்படியா பண்ணுவது ? என்று வயிற் றெரிச்சலே வாய்விட்டே புலம்பினர். சே, என்னமா இருந்த இடம்! எப்படிப் போயிட்டுது 1 என்ற அங்கலாய்ப்பு அவர் மனசுள் திரும்பத் திரும்ப ஒலித்தது.

சிவபுரத்தினுள் கொண்டுவிடும் ரஸ்தாவை இப்போது புதுசாகப் பார்க்கிறவர்களுக்கு-அல்லது, பத்துப் பன்னி ரண்டு வருஷங்களாக மட்டுமே பார்த்து வந்திருப்பவர்களுக்கு - மூளியான அதன் தோற்றம் எந்தவிதமான உளக்கிளர்ச் சியையோ, உணர்வுச் சுழலேயோ எழுப்பிவிடாது. பதினேந்து வருஷங்களுக்கு முந்தி, அதற்கும் முன்பிருந்தே, அந்த ரஸ் தாவை கண்டு பழகியவர்களுக்கு தற்போதைய அதன் வெறுமை இனிய பழைய நினைவுகளைக் கிளருமல் இருப்ப தில்லே. முன்பு அவர்கள் கண்டு அனுபவித்தது குளுகுளு பசும்சோலே ; இப்போது அங்கே காணக்கிடப்பது வெறும் பாலே. -

மயிலேறும் பெருமாள்; நாற்பது வருஷங்களுக்கு முன்பு, ஒரு விரக்தியில், வேதனையில், வைராக்கியத்தில் ஊரைவிட்டு வெளியேறியவர், சொந்த ஊரின் நினைவாகவே இருந்த போதிலும், இடையில் ஒருமுறைகூட தென்திசைப் பக்கம் காலடி எடுத்து வைக்கவில்லை. அவ்விதம் அவர் அடம் பிடிக் காது அவ்வப்போது, இடைக்கிடை, இந்த ஊரின்பக்கம் வந்து போயிருந்தால், சிவபுரம் ரஸ்தாவின் தோற்ற மாறுதல் அவருக்கு இவ்வளவு பெரிய அதிர்ச்சியாக இருந்திருக்காது.

சிவபுரத்துக்கும் ரயிலடிக்கும் இரண்டு மைல் தூரம். ரயிலடியிலிருந்து கிளம்பியவர்கள் முதல் ஒரு மைல் வறண்ட சூழ்நிலையைத்தான் அனுபவித்தார்கள் அந்தக் காலத்தில். காடாக வறண்டுகிடந்த பகுதியில் முன்பு உடைமரங்கள் மட்டுமே அங்குமிங்குமாக நின்றன. சிலசில பனேகள் த&) தூக்கியும், தரையோடு தரையாக ஆவாரை, ஆதாஆள போன்ற குத்துச் செடிகள் புதர்புதராகவும், காட்சிதரும். வெண்புழுதி படிந்த அந்த ஒரு மைலேக் கடந்ததும், ரோடு வளைந்து திரும்பும் இடத்திலிருந்து இனிமையும் குளுமையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/43&oldid=589287" இலிருந்து மீள்விக்கப்பட்டது