பக்கம்:நினைவுச்சரம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரம் #5

இளசா, மினுமினுப்போடு இருக்கும் இலக. பெருங்குடி ஆச்சி மத்தியான சாப்பாட்டைக்கூட வாடிக்கைக்காரங்களுக்கு ஆல இலகளே வட்டமாத் தச்சு வச்சிருக்கதிலேதானே பரி மாறு வா? வீடுகளிலேகூட திடீர்னு இலே வேணுமின்னலும் - காசு கொடுத்து இலே வாங்கமுடியாத சமயங்களிலும் - ஆல

இலகளே பறிச்சுவந்து, வட்டமா அஞ்சாறு இலைகளே சேர்த்து வைத்து, வாரியலிலிருந்து எடுத்த ஈர்க்குச்சியை நகத்தாலே ரெண்டாக வகிர்ந்து, சிறுசுசிறுசாக் கிள்ளி எடுத்து, அந்தத் துண்டுகளைக்கொண்டு இலகளே சேர்த்துத் தைப்பாங்க. அந்த வெள்ளே குச்சிகளின் தையலும், இலைகளின் பச்சை மினு மினுப்பும், வட்டமாக அமைந்த வடிவமும், பார்க்கதுக்கே ஒரு அழகாயிருக்கும்.

- இப்ப நினேக்கிறபோது, அந்தக் காலத்திலும் வாழை இலைப் பற்ருக்குறையும் தட்டுப்பாடும் இருந்திருக்கலாம்னு தோணுது. ஆலுைம், ஆல இலகள் இலேப்பஞ்சம் இல்லாத படி தவிர்த்திருக்கணும்னு தோணுது. பூவரசமர இலேகளேயும் சாப்பாட்டு இலையாக உபயோகிச்சிருக்காங்களே ! நம்ம விட் டுக்கு எதிரே ரெண்டு பூவரச மரம் நின்னுதே? பெரிய, அகல, இலேகளாயிருக்குமே? எத்தனை தடவை வண்டிக்காரனுக்கும் இதர ஆள்களுக்கும், பூவரச இலைகளே தண்ணியிலே நனைச் சுப் பரப்பிவைத்து அதிலே அம்மை சோறுபோட்டிருக்கா ! வாதாங்கொட்டை மர இலைகள்கூட சாப்பிடதுக்கு ஏற்ற இலே களாப் பயன்பட்டிருக்கு. இந்த ஊரிலே நாலேஞ்சு வாதா மரம் அங்கும் இங்குமா நின்னுது. இப்ப அதுகளும் வெட் டுண்டு, விறகா எரிஞ்சு போயிருக்கும். -

- வே, ஒத்தை செத்தையா, அங்கையும் இங்கையும் நிக்கிற மரங்களை வெட்டி எரிக்கிறதைப்பத்தி வயிறெரியதுக்கு ஒண்ணும் இல்லே. ஆ,ை இப்படியா, ரோடு பூரா, ஒரு மைல் தூரத்துக்கு, அடுக்கடுக்கா, துரணமைச்சுப் பந்தல் போட்டது மாதிரி வளர்த்துவிட்டிருந்த பெரிய பெரிய மரங் களே...எந்தக் காலத்திலே எந்தப் புண்ணியவாங்க நட்டு வச்சுப் பாதுகாத்து, பத்திரமா வளர்த்துப் பேணினங்களோ!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/45&oldid=589289" இலிருந்து மீள்விக்கப்பட்டது