பக்கம்:நினைவுச்சரம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரம் 47

நாளுக்குநாள் பச்சையில் பல நிலைகள் காட்டி, கனமேற்று, மினுமினுத்து, வெயிலில் பளிரிடுவது - அது ஒரு இனிமை.

பிறகு காய்கள் தோன்றும். பழங்கள் மிகும். மைனுக்கள் கூட்டம் கூட்டமாய் வந்து பழங்களேத் தின்று பாடிக்களிக்கும்" காக்கைகள் வந்து விருந்துண்ணும். பறவைகளின் களி வெறிக் கூச்சலும் பறந்து திரிதலும் தனித்தனி இனிமைகள்.

-எல்லாம் போச்சு 1 எல்லாம் போச்சு ! பொட்டல் தோற் றமும் சுடுகாட்டு அமைதியும் குடிகொண்டிருக்கு. இப்போ வெயில் வேளையில் நடந்து போகவே முடியாது...ஏன் நடக் கனும்? நாகரிகம்தான் நடப்பது கேவலம்’ என்கிற நினைப்பை மனுசங்ககிட்டே உண்டாக்கிட்டுதே. அரை மைல் தூரம் போக வேண்டியிருக்கும். பத்து நிமிசத்திலே நடந்துபோயிரலாம். ஆனால், பஸ் வரட்டும் பஸ் வரட்டுமேயின்னு அரைமணிக் கும் அதிகமாகவே காத்து நிற்பாங்க. பஸ் வந்ததும், முட்டி மோதி ஏறி, இடிச்சு நெருக்கி நின்னுக்கிட்டே போவாங்க. இது நாகரிகமாம். முன்காலத்திலே நடந்து நடந்து போற திலே சுகம் கண்டாங்க. இந்த ஊரிலேயிருந்து தூத்துக்குடிக் கும் திருச்செந்தூருக்கும், சேரகுளம் கார்சேரி மாதிரி தூரத்து ஊர்களுக்கும் நடந்து போவதையே வழக்கமாக் கொண்டிருந் தவங்களை எனக்குத் தெரியும். பாளையங்கோட்டைக்கு ஆற்றைக் கடந்து நடந்து போயிடலாம். மூணே மூணு மைல் தான். திருநெல்வேலிக்குப் போக எத்தனையோ பாதைகள். ஜங்ஷனுக்கு ஆற்றங்கரை ஓரமாக நடந்து போவது தான் சுலபவழி. இப்போ அப்படி யாருமே நடந்து போவதில்லே. அட, நடந்து போய்த்தான் பாப்பமே என்று எண்ணி ஜாலி யாக் கிளம்புகிறவனே, பைசா செலவு பண்ணப் பயந்த பய! கஞ்சம்பட்டி யின்னு கேவலமாக் கருதுகிற, பேசுகிற, மனே பாவம் ஜனங்களிடம் ஏற்பட்டுபட்டுது!

- ஹே, மனுசங்க மாறலேன்னு நான் நெனச்சது. சரியில்லேன்னு ஒவ்வொரு பாயின்ட்டிலும் தோண ஆரம் பிக்குதே வேய் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/47&oldid=589291" இலிருந்து மீள்விக்கப்பட்டது