பக்கம்:நினைவுச்சரம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 நினைவுச் மயிலேறும் பெருமாள் பிள்ளையின் மனக்குறளி திடீர்ச் சிலிர்ப்பு பெற்றுக் கனத்துக் கொண்டது.

உம், நடக்கது நடக்கட்டும்! என்று முனகினர் பிள்ளே. “எது எது எப்படி எப்படி நடக்க வேண்டுமோ, அது அது அப்படி அப்படி நடந்தே தீரும். காலத்தின் நியதி அது’ என்றது அவர் மனம்.

5

மயிலேறும்பெருமாள் பிள்ளைக்கு, சொந்த ஊர் என்ப தல்ை சிவபுரத்தின் மீதிருந்த பற்றுதலேயும் அபிமானத்தை யும்விட அதிகமான பந்தமும் பாசமும் அவ்வூரிலிருந்த வீட்டின்மேல் இருந்தது.

அவருடைய அப்பா, அம்மாவின் தூண்டுதல்மேல், கட்டிப்போட்ட வீடு. அம்மா ஆசையோடு அதைப் போற்றிப் பேசி வந்ததல்ை, அவருக்கு அந்த வீட்டின்மீது சகோதர பாசத்துக்கு இணேயான ஒரு பிரியம் ஏற்பட்டு வளர்ந்து வந்தது.

மயிலேறும்பெருமாள் அதை வெறும் வீடாகக் கருதியதே இல்லை. தன்னுடைய உடன்பிறப்பு என்றே மதித்தார். அதன் ஒவ்வொரு பகுதி.மீதும் அவருக்கு அன்பும் பிடிப்பும் வளர்ந்துகொண்டே இருந்தன. ..

அந்த வீட்டின்பேரில் இருந்த பற்றுதலுக்கு இணையான ஈடுபாடு, அவருக்கு அப்பா வாங்கி வைத்திருந்த வயல்கள்மீது ஏற்பட்டதில்லை. வயல்களே உழவன் ஒருவனிடம் கட்டுக் குத்தகைக்கு விட்டிருந்தார். பூவுக்கு இத்தனே கோட்டை நெல்’ என்று ஆறு மாதங்களுக்கு ஒருதடவை நெல் ஒழுங் காக வந்துகொண்டிருந்தது. அதனல் அவர் வயல்கள்மீது அதிக அக்கறை கொள்ளவேண்டிய அவசியம் இல்லாமலலே போய்விட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/48&oldid=589292" இலிருந்து மீள்விக்கப்பட்டது