பக்கம்:நினைவுச்சரம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

σσώ 49

ஆஞல், வீட்டு விஷயம் அப்படி இல்லையே! அதன் கூடவே அவர் இருந்தார். அவருடைய ஒரு அங்கம்போலவே அது இருந்தது. அவரது முப்பதாவது வயது வரையில்.

மயிலேறுவின் அப்பா, ஐயாப்பிள்ளே என்கிற நல்லகண் னுப்பிள்ளே, மத்தியதர வர்க்கத்துப் பிரமுகர்கள் பலரையும் போலவே, எதுவும் செய்யாமலே நாளோட்டி, உடம்பிலே பிடிக்காமல் வாழ்ந்து, ஒருநாள் மண்டையைப் போட்டார். அப்போது மயிலேறுவுக்குப் பதினைந்து வயது. வீராவரம் பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருந்தான்.

தாலியறுத்தால் பொம்பிளேக்கு தாசில் உத்தியோகம் வந்தமாதிரி என்ற அந்த வட்டாரத்துப் பெண்கள் அந்தக் காலத்தில் பேசுவது உண்டு. புருஷனுக்கு அடங்கி, கஷ்டப் பட்டு, இருந்ததுபோய், சுதந்திரமாய் காரியங்கள் செய்யும் உரிமை அவளுக்கு வந்துவிடுகிறது என்பதலுைம் இருக்” லாம். புருஷன் செத்தபிறகு, தான் நினைத்த மூப்பாக ஸ்ர்க் கோடு போகலாம் ?-ஊர்சுற்றி, கோயில் குளம், உற்ருர் உற வினர் வீடு என்று அலேயலாம்-என்பதாலும் இருக்கலாம்.

அது எப்படி இருந்தாலும், வேப்பமரத்து வீட்டுக் காமாட்சி அம்மாள் அந்த உரிமைகளே பயன்படுத்திக்கொள் :ளும் ஆசை அற்றவளாகவே காணப்பட்டாள். வீடு-வீடு என்றே உயிரைக் கொடுத்தாள் .

ஏளா காமாச்சி ! இன்னமே இவ்வளவு பெரிய வீடு உனக்கு என்னத்துக்கு? நீயும் உன் மகனும்தானே? ரெண்டு பேருக்கு ஒரு அடுப்படியும் அதை ஒட்டினப்லே இருக்கிற கட்டும்தான் போதுமே. மீதி இடத்தை வாடகைக்கு விடேன். மாசாமாசம் ரூபா கிடைக்கும்லா என்று அவளுக்கு வேண்டிய * பர்வதத் தக்கா (பர்வதம் + அக்கா) பன்னிப் பன்னிப் பேசினுள். -

உங் கண்ணிலே கொள்ளி வய்க்கோ ; உந்நாக்கைச் சுட்டுப் பொசுக்கோ என்று காமாட்சி மனசுக்குள் கருவிக் கொண்டபோதே, தேன் கசியும் நாவினுல் அன்பாகச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/49&oldid=589293" இலிருந்து மீள்விக்கப்பட்டது