பக்கம்:நினைவுச்சரம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S2 క్తిశీణా6;#

என்ற மதிப்பீடு பெண்ணப் பெற்று கல்யாணம் பண்ணிக் கொடுக்கத் தவிக்கும் புண்ணியவாட்டிகள் மத்தியிலே ரவி யது. போகப்போக, வெள்ளுரா பொல்லாதவ, அவ மகன் ஒரு அம்மாப்பிள்ளே. அவ சொல்படிதான் ஆடுவான். நாளேக்கு நம்ம பொண்ணு அங்கே போய் கண்ணே கசக்கிக் கிட்டு நிக்கப்படாது? என்று திருமகள்களைப் பெற்ற பெரு மகளிர் பேச்சுகளைப் பரவவிட்டனர்.

அதல்ை என்ன ஆயிற்று? காமாட்சி அம்மாளே தேடி வருவோர் எண்ணிக்கை குறைந்து குறைந்து, ஒருவருமிலர் என்ற திலே வந்தது. பையனுக்கென்ன வயசா ஆயிட்டுது? அவனுக்கு இனிமேலா பொண்ணு பொறக்கப்போரு? எங்கே யாவது ஒருத்தி பொறந்துதானே இருப்பா ? வியாழநோக்கு வந்தா, தான பொண்ணு வீட்டுக்காரங்க தேடிவந்து கல்யா ணத்தை முடிச்சு வைப்பாங்க ? என்று பேசிப்பேசி மகிழ்ந்து போளுள் அவள்.

பையனுக்கு இருபத்திரண்டு வயது ஆனதும் அவளுக்குக் கவலே பிடித்துவிட்டது. இவனுக்கு எப்ப கல்யாணம் நடக்கும்? இந்த வீட்டிலே இவனுக்குக் கல்யாணத்தை நடத்தி நம்ம கண்ணுலே பார்க்கமுடியாமப் போயிருமோ? இந்த வீட்டிலே பேரன் பேத்திக விளையாடுற நாளுக வராமலே போயிருமோ? இப்படி பல உளைச்சல்கள்.

அதல்ை சோதிடர்களுக்கும், குறிகாரர்களுக்கும், கோடாங் கிகளுக்கும் அந்த வீட்டில் நல்ல வரவேற்பு கிடைக்கலாயிற்று. அந்த இனத்தினர் என்ன உளறிலுைம் அது வேதவாக்கு ஆக மதிக்கப்பட்டது.

காமாட்சி அம்மாள் ஏகப்பட்ட கோயில்களுக்குத் தாராள மாகச் செய்தாள். குறிகாரி, மந்திரவாதி என்று சொல்லிக் கொண்டு வந்த வீணிகளும் வீணன்களும் சாந்தி கழிக் கனும், தோஷம் போக்கனும் எனக்கூறி, துணிந்து கேட் டதை எல்லாம்-துணிகள், அரிசி, பணம் எல்லாம்-தாராள மாகக் கொடுத்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/52&oldid=589296" இலிருந்து மீள்விக்கப்பட்டது