பக்கம்:நினைவுச்சரம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரம் 53.

அப்படியும் மனம்போல் மங்கள காரியம் நடக்க வழியில்லே என்ருனதும், அதே கவலேயாக நோய்வாய்ப்பட்டாள் காமாட்சி. தனது உறவினர், தனக்குத் தெரிந்தவர்-அவரை யும் இவரையும் கண்டு, நல்ல சொல் கூறி, மகனுக்குப் பெண் பார்த்துக் கல்யாணத்தை முடித்து வைக்கும்படி அவள் கேட்டுக் கொண்டாள். அவர்களுடைய முயற்சியும் பலிக்கா மலே போய்விட்டது. * : * . . . . . .

எனக்கு ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணுன்னு ஒரு மகன் இருந்தும், அவனுக்கு கல்யாண பாக்கியம் கண்டு, பிள்ளைகுட்டி எடுத்து, இந்த வீடு கலகலப்பா இருக்கிறதைக் கானக் கொடுத்து வைக்கலியே. எவள் எவளோ என்னை பழிச்சுப் பேசினதெலலாம் சரியாயிட்டுதே! என்ற ஏக்கம் சாகும்வரை அவளேவிட்டு விலகவில்லை.

வயது முடிந்திருந்தது. -

அந்தப் பெரிய வீடும் அவனும் தனித்தவர் ஆயினர்.

அவனுக்குத் துனே அந்த வீடு ; அந்த வீட்டுக்குத் துணை

அவன் என்ற நிலமை. - .

அவள் செத்தபோது மயிலேறுவுக்கு இருபத்தைந்து

அவன் நிலக்கு இரங்கி அனுதாபம் காட்டிப் பேசியவர் களின் அன்பும் பரிவும் ஒருசில நாட்களே உலவின. அதெல் லாம் வெளிப்படையான-மேம்போக்கான-அன்பும் தயை யுமேயாகும்; அவர்கள் உள்ளத்தில் நாயும், பேயும், பூனேயுமே குடிகொண்டிருக்கும்; அவனே மட்டுமல்லாது, தங்களையும் தங்கள் மனைவி மக்களேயும் தவிர்த்த இதரர்களே எல்லாம், முக்கியமாக அந்த ஊர்காரர்களே, கடித்துக் குதறிக் கவ்வி உதறிச் சின்னபின்னப்படுத்தவே அவர்களது உணர்வுகள் எப்பவும் தயாராக இருக்கும் என்பது அவனுக்கும் தெரிந்த விஷயம்தான். ஒரேநாளின் பெரும்பகுதிப் பொழுதுகளிலும் முச்சந்தியிலும் கோயில் வாசலிலும், ஒரு பெரிய வீட்டுத் திண்ணையிலும் ஆலமரத்தடியிலும், அமர்ந்து ஊர்க்கதை, நாட்டுக்கதை என்ற பேரில் எல்லோரைம் பற்றி வம்பு பேசி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/53&oldid=589297" இலிருந்து மீள்விக்கப்பட்டது