பக்கம்:நினைவுச்சரம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

<&

«#ğis) 57

இந்த வீட்டில் குடியும் குடித்தனமுமாக வாழவேண்டும் என்ற ஆசை ஏனே எழவில்லே.

சிலர் என்னடே, உனக்கு எப்ப கல்யாணம் ?? என்ருே, 6. எங்களுக்கெல்லாம் எப்ப சோறு போடப்போறே?? என்ருே கேட்பது உண்டு. அவர்களிடம் என்ன கல்யாணம் வேண் டிக்கிடக்கு !’ என்றும், கல்யாணம் பண்ணிக்கிட்டவங்க எல்லாம் என்ன சிறப்பெடுத்திட்டாங்க ; கல்யாணம் பண் மைல் இருக்கிற நான் என்ன குறைஞ்சு போனேன்? என்றும் அலுப்பாகவும், சுரத்தில்லாமலும் பேசிவிடுவான்.

ஆணையும் பெண்ணையும் கல்யாணம் என்று சேர்த்து வைப்பதை சுயலாபம் தரக்கூடிய ஒரு தரகு வியாபாரமாக எண்ணி, வெற்றிகரமாக முடித்து வைப்பதை பிசினஸ்ாக நடத்தி வாழ்ந்த சமூகப் பெரியார்கள் சிலபேர்கள், மயிலேறு வையும் நச்சரிக்காமல் விடவில்லே. என்னப்பா மயிலேறு, எப்படிப்பட்ட பொண்ணு வேனும், சொல்லு. உனக்குத் தேவையான பொண்ணே நாங்க பார்த்துக் கொண்டாரோம்? என்று முற்றுகையிட்டார்கள்.

எனக்கு எந்தப் பெண்ணும் வேண்டாம். எந்தமாதிரிப் பெண்னேடவும் என்னலே ஒத்துப்போக முடியும்னு எனக்குத் தோன லே. ஒவ்வொரு குடும்பத்திலேயும் நடக்கிறதைத்தான் நான் பார்க்கேனே. கல்யாணம்னு ஆசைப்பட்டு எவளே யாவது தாலியைக்கட்டி அழைத்துக்கொண்டு வர, அவ வாழ் நாள் பூராவும் நம்மை கழுத்தறுத்து வதைபண்ண - அதுல் லாம் என்னத்துக்கு? இப்படியே நிம்மதியா இருக்கிறதை விட்டுப் போட்டு ! என்னவோ சொல்லுவாகளே, வேலியிலே இருக்கிற ஒனனே எடுத்து மடியிலே வச்சுக் கட்டுவானேன்? அப்புறம் அது குத்துது, குடையது, கடிக்குதுஇன்னு சங்கடப் படுவானேன்? வெறும் சீண்ட்ரம் புடிச்ச எழவு அந்தப் பேச்சையே என்கிட்டே எடுக்காதீங்க ? என்று சொல்வி முறித்துவிட்டான்.

இவன் என்னடா இவன்! கல்யாணப் பேச்சை எடுத்தால் எழவ்ை இழுத்துவச்சு அழுதான்! இவனுக்கு புத்தி சரி

பூ-108-கி. 4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/57&oldid=589301" இலிருந்து மீள்விக்கப்பட்டது