பக்கம்:நினைவுச்சரம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரம் 59

தந்தை இல்லாத இவனே முன்னுக்குக் கொண்டுவர வேண்டி யது உங்கள் பொறுப்பு. உங்கள் கடையிலேயே இவனுக்கு ஒரு வேலே போட்டுக் கொடுத்து, இவனே ஆளாக்கி விடும்படி கேட்டுக்கொள்கிறேன். முருகப் பெருமான் உங்களுக்கு நல்லதே செய்வான்’ என்று கோரியிருந்தார்.

மயிலேறும் பெருமாள் இரவோடு இரவாக ஊரை விட்டு வெளியேறினன். அந்நாட்களில் தாழையூத்து கெடி"க்கு ராத்திரி பன்னிரண்டரை மணிக்கு வடக்கே போற வண்டி2 வந்து கொண்டிருந்தது. அது அவனுக்குச் செளகரியமாக இருந்தது. -

அந்த ஊரையும் அங்கு 'கிணற்றுத் தவளே”களாகவும் கேடுகு உள்ளத்தவர்'களாகவும் காலம் கழித்துக்கொண்டிருந் தவர்களேயும் விட்டுப் போவதில் அவன் மனம் கலங்கவில்லை. அருமையான வீட்டைவிட்டுப் போறமே !’ என்ற ஏக்கம் தான் அவன் இதயத்தில் கனத்தது; வலி உண்டாக்கியது; தொண்டையை அடைத்துத் துயரப்படுத்தியது; கண்ணிர் சிந்தச் செய்தது. -

சிவபுரத்தின் மயிலுப்பய மயிலேறும் பெருமாள் பிள்ளே ஆகி, மீனட்சியின் மாப்பிள்ளை ஆகி, சொக்கலிங்கம் என்ற புத்திர பாக்கியத்தின் தந்தை ஆகி, பெரிய மனிதத்தோரண கள் பெறுவதற்கு மதுரை வகை செய்தது. நாறும் பூநாத பிள்ளை கைகாட்டிவிட, அவன்போய் சேரவும் அவனுக்குக் கைகொடுத்து உதவிய கணபதியா பிள்ளை மயிலேறுவை வாழ வைத்தார்.

அவரது வேல்முருக விலாசம் வெள்ளி பாத்திரக் கடை? யில் முதலில் அவனுக்கு சிறு வேலே ஒன்று போட்டுக்கொடுத் தார். பிறகு, பையனின் சுறுசுறுப்பையும் அறிவையும் கவனித்து, கணக்கெழுதும் வேலே தந்தார். நாளடைவில் கடைக் கணக்குப் பிள்ளே என்ற மதிப்பு மயிலேறுவுக்குக் கிடைத்தது. நல்ல சம்பளமும் வந்தது. . . . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/59&oldid=589303" இலிருந்து மீள்விக்கப்பட்டது