பக்கம்:நினைவுச்சரம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரம் 61

கணபதியா பிள்ளே குறிப்பிட்டது மனு, பென.வுக்கு * பெரிய தொகை 2யாகத்தான் இருந்தது. சிறிது மலேத்தார். எனினும் எப்படியாவது பணம் புரட்டி, வேல்முருக விலாசம்’ எனப் பெயர் பொருத்தம் மிகுதியாக உடைய கடையை தனக்கு சொந்தமாக்கிவிட வேண்டியதுதான் என்று அவர் மனம் தீர்மானித்தது.

மீட்ைசியிடம் இதை சொல்லி, அவள் கழுத்திலே கிடந்த நகைகளே அவர் கேட்டபோது அவள் தயங்கினுள். ஊரிலே பெரிய வீடு கிடக்குதுங்கிறீகளே. அதை வித்துப் பணம் அனுப்பும்படி எழுதுங்களேன்’ என்ருள். அப்போதே அவள் மீது மயிலேறும் பெருமாளுக்கு ஒரு கசப்பு பிறந்துவிட்டது. பிறகு அவள் நகைகளே கழட்டிக் கொடுத்தாலும்கூட, அப்படி ஒரு வார்த்தை சொன்னதுக்காக அவர் மனம் தன் மனை வியை மன்னிக்கவே இல்லை.

நாரம்பு மாமாவுக்கு எழுதி, வயல்மீது பணம் புரட்டி’, நிலேமையை சமாளித்துவிட்டார் மனு, பென. வேல்முருக விலாசம் வெள்ளி பாத்திரக்கடை. புரொப்ரைட்டர் : மயி லேறும் பெருமாள்பிள்ளை என்ற புதிய போர்டு கடையில் மாட்டப்பெற்ற அன்று அவர் அடைந்த பெருமைக்கு அளவே கிடையாது.

நாறும்பூநாத பிள்ளை சிவலோக பதவி அடைய நேரிட் டது. அதற்கு முன்னதாகவே அவர் தன்மகன் நெல்லேயா என்கிற பிறவிப் பெருமாளே, மற்றவர் நிலங்களே மேல் பார்வை பார்க்க 'வும், அதன்மூலம் தனது வாழ்க்கை வசதி களே தேடிக்கொள்ளும் திறமையை வளர்க்கவும் தயார்படுத்தி வீட்டிருந்தார். ஆகவே, மன. பென.வின் நிலங்கள், வீடு பற்றிய கவலே தலைதுாக்குவதற்கு இடமே இல்லாது போயிற்று. பிறவிப் பெருமாள் அப்பாவைவிடச் சாமர்த்தியமாகவே மேல் பார்க்கும் பிசினஸ்ை நடத்திவந்தான். அவனுக்கும் கொஞ்சம் நிலமும் வீடும் இருந்தது. சிவகாமி மனேவியாக வாய்த்திருந்தாள். காலப்போக்கில் அவன் அவர் ஆகி, ஊரில் பெரிய மனிதத்தன்மையும் பெறமுடிந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/61&oldid=589305" இலிருந்து மீள்விக்கப்பட்டது