பக்கம்:நினைவுச்சரம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 நினைவுச்

மயிலேறும் பெருமாள் பிள்ளை நிலங்களேப்பற்றி ஏனே தானே என்று எழுதினுலும், ஒவ்வொரு கடிதத்திலும் வீட்டைப் பற்றி அதிக அக்கறையோடு குறிப்பிடத் தவறமாட்டார். * வீட்டை கவனித்து வரவும். தினசரி ஒருதடவையாவது பெருக்கி சுத்தம் செய்யவும். பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை மெழுக ஏற்பாடு செய்யவும். வெள்ளி செவ்வாயில் அந்திவேன்யில் கதவுகளே திறந்துவைத்து, கொஞ்ச நேர மாவது விளக்கு எரியும்படி கவனித்துக் கொள்ளவும் . இது பிறவிப்பெருமாளுக்கு அவர் விடுத்திருந்த ஸ்டாண்டிங் இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் 2. அடிக்கடி இவற்றை அவர் நினைவுபடுத் தவும் கூசுவதில்லே. இதற்கான செலவுகளே எல்லாம் வயல் வருமானத்திலிருந்து எடுத்துக்கொள்ளும்படி ம.ை பென. கை காட்டியிருந்தார்.

பிறவியா பிள்ளையும் கணக்கு எழுதிவிட்டு, தயங்காமல் எடுத்துக்கொண்டிருந்தார்.

சிவபுரத்துக்கு எலெக்டிரிக் கபட் வந்தது. முதலில் சில பெரிய வீடுகளில் எலெக்ட்ரிக் விளக்குகள் எரியலாயின. இதை பிறவியாபிள்ளே மன. பென.வுக்கு எழுதவும், தனது வீட் டிலும் வயரிங்பண்ணி, கனெக்ஷனுக்கு ஏற்பாடு செய்யும்படி அவர் தெரிவித்து, தன்னல் ஆகவேண்டியதையும் கவனித்து முடித்தார். ஒரு மாதத்திற்குள் அந்த வீட்டிலும் எலெக்ட்ரிக் லேட்டுகள் எரியலாயின.

தினசரி மாலேயில் வீட்டை திறந்துவைத்து, கால் மணி நேரமாவது எல்லா விளக்குகளையும் எரியவிடுங்கள். வெள்ளிக்கிழமை, கார்த்திகை-இதுமாதிரி நல்ல நாட்களில் பட்டாசலிலும் திண்ணேயிலும் ஒருமணி நேரமாவது விளக்கு எரியட்டும். சார்ஜ் என்ன ஆயிரப்போவுது எப்படியும் மாதாமாதம் மினிமம் சார்ஜ் கட்டத்தானே போருேம் ! என்று மன. பெனு. மதுரையிலிருந்து அறிவித்தார்.

சிவபுரத்திலிருந்த பிறவிப்பெருமாள் அவர் விருப்பத்தை நிறைவேற்றி வந்தார். தானகவே நினைத்து, சுகந்த வாசனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/62&oldid=589306" இலிருந்து மீள்விக்கப்பட்டது