பக்கம்:நினைவுச்சரம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரம் 63

உளள ஊதுவத்தி வாங்கி வெள்ளிக்கிழமைகளிலும், கிருத் திகை பெளர்ணமி அமாவாசை நாட்களிலும் ஏற்றிவைத்து, அந்தப் பெரிய வீட்டில் வாசம் நிலவும்படிச் செய்தார். இதை மயிலேறும் பெருமாளுக்குக் கடிதத்தில் அறிவித்தபோது அவர் மிகுந்த சந்தோஷம் அடைந்தார். பிறவியாபிள்ளையை வெகுவாகப் பாராட்டத் தவறவில்லை. -

6

மயிலேறும் பெருமாள்பிள்ளை சிவபுரம் வீட்டுக்குத் திரும்பி வந்த முதல் இரவில் அந்த வீட்டில் உள்ள எல்லா விளக்கு களையும் விடிய விடிய எரியவிட்டார்.

அறை அறையாக இருந்த அந்தப் பெரிய வீட்டில் எலெக்ட்ரிக் விளக்குகள் எரிந்துகொண்டிருந்தது ஒளிமயமாக, அதுவே ஒரு தனிக் களேயாக’, இலங்கியது.

அவர் ஊருக்கு வரப்போவதை அறிவித்து பிறவியா பிள் இளக்குக் கடிதம் எழுதியிருந்ததால், முன்கூட்டியே வீட்டைப் பெருக்கி மெழுகி, நு, லாம்படை அடித்து, துப்புரவாக வைப் பதற்கு செளகரியமாக இருந்தது.

மன. பென.வின் ருசிகளையும் ஈடுபாடுகளையும் ஓரளவுக்கு அறிந்து வைத்திருந்ததால், பிறவியாபிள்ளை முன்யோசனை யோடு ஒரு மண்பான நிறையக் குடிதண்ணிரும் கொண்டு வைத்திருந்தார். வடக்கேயிருந்து வாற வண்டி பத்துமணிக்கு டேசனுக்கு வரும். அதிலே வந்து இறங்கில்ை, நம்ம ஊருக்கு பத்தேகால்-பத்தரை மணி சுமாருக்கு வாற காரை புடிச்சு வந்திரலாம். அந்தக் காரு வந்திட்டுப் போறவரை காத் திருக்கலாமே? என்று அவர் பெரிய வீட்டின் திண்ணையி லேயே படுத்துக்கிடந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/63&oldid=589307" இலிருந்து மீள்விக்கப்பட்டது