பக்கம்:நினைவுச்சரம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரம் - 65

சாய்வு நாற்காலியில் சரிந்து கிடப்பதிலும் அவருக்கு சந்தோ விம் கிட்டியது.

- இவ்வளவு பெரிய வீட்டுக்கு எலெக்ட்ரிக் லேட்டுதான் அம்சமா, நிறைவா இருக்கு. எத்தனை அரிக்கன் லாந்தர்கள் ஏத்தி வச்சாலும் இவ்வளவு வெளிச்சம் கிடைக்குமா? அந்தக் காலத்திலே அரிக்கன் லாந்தலும், அம்மை குருவி விளக்கு” ன்னு சொல்லுவாளே அப்படிப்பட்ட பெட்ரூம் லேட்டு களும்தானே வச்சு ஒப்பேத்தினுேம் ? அப்போ அவைதான் செளகரியமாத் தோணிச்சு. நிறைய வெளிச்சம் தந்த மாதிரி :பும் திருப்தி இருந்துது. அதுகளும் இல்லாம, குத்துவிளக்கும் கைவிளக்குகளும் வச்சு, திருப்தியாக் கழிச்ச காலமும் இருக்கத் தானே செய்தது? கடலெண்ணெய் (கடலை எண்ணெய்) அல்லது பின்னக்கெண்ணே (புன்னேக்காய் எண்ணெய்) ஊற்றி குத்து விளக்கையும் கைவிளக்குகளையும் எரிச்சதிலே ஒரு அழகும் குளுமையும் இருக்கத்தான் செய்தது. சனங்க கண்ணும் இவ்வளவு கெடாமலிருந்தது. இப்போ சின்ன சின்ன வயசிலேயே சோடாபாட்டில் தண்டிக்குக் கண்ணு டியை மாட்டிக்கிட்டில்லா முழிக்குதுக எல்லாம் ! நாப்பது வயசுக்குள்ளே கண்ணு குருடாகி, பார்வை தெரியாமலே போவுது. கண்ணுடி என்ன கண்ணுடி ...இப்ப பின்னேக் கெண்ணைக்கு என்ன, அது எப்படி இருக்கும்னு எண்னேக் கடைக்காரனுகளே நம்மகிட்டே கேப்பான்-நாம கடைக்குப் போயி பின்னக்கெண்ணே இருக்குதான்னு கேட்டா !

பின்னக்கெண்ணே கிடைக்காவிட்டாலும்கூட, கடலே எண்ணெய் அல்லது நல்லெண்ணெயை ஊற்றி தினந்தோறும் குத்துவிளக்கைப் பொருத்தி வைக்கவேண்டும் என்று, பெரிய பிள்ளை அந்த இரவிலேயே தீர்மானித்து விட்டார்.

மறுநாள் முதல் வேலையாக, வெங்கலாத்திரப் பெட்டி’ (வெண்கலப் பாத்திரப் பெட்டி)யை திறந்து பெரிய குத்து விளக்கை வெளியே எடுத்தார். .

- எவ்வளவு பெரிய பெட்டி ! என்ன கனம் கணக்கு. செக்குமாதிரி. வெறும் பெட்டியே ரொம்ப கனம் கனக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/65&oldid=589309" இலிருந்து மீள்விக்கப்பட்டது