பக்கம்:நினைவுச்சரம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 நினைவுச்

வெறும் பெட்டியைத் தூக்கி நகர்த்தி வைக்கவே மூணு ஆளு. வேணும். எதுக்குத்தான் முந்திக் காலத்திலே எல்லாச் சாமான்களையும் இப்படி தடிதடியாச் செய்தாங்களோ? எந்தச் சாமானப்பாரு. எல்லாம் செக்குமாதிரியும், குந்தானி மாதி ரியும், தண்டிதண்டியா. சாமான்கள் செய்யக்கூடிய மூலப் பொருள்கள் நிறைய, தாரளமா, மலிவாக் கிடைச்சுது என்ப. தலுைம் இருக்கலாம். ரொம்ப காலத்துக்கு ஈடு கொடுக் கனும், நல்ல உறுதியாய் செய்து வைப்போம் என்ற நினைப் பாலும் இருக்கலாம். எதையும் சின்ன அளவிலே, நைலாநகாசாச் செய்யத் தெரியாத காரணத்தாலும் இருக்கலாமே !..

வெண்கல பாத்திரங்களும் பழங்காலத்தவை. எல்லாம். பெரிசு பெரிசா, தடிதடியா. வெண்கலப்பானே, சோடுச்சட்டி, கும்பா-இப்படி எல்லாமே கல்லுக் கல்லா. இந்தக் காலத்துப் பொம்பிளேகளுக்கும் புள்ளெகளுக்கும் இதை எல்லாம் துளக்கி எடுத்துப் பொழங்குறதுக்கே உடம்பிலே சீத்துவம் கிடையாது. அந்தக் காலத்திலே மனுசங்களும் ஸ்ட்ராங்க இருந்தாங்க. அதையும் சொல்லனுமில்லே ! -

அவருக்கு தானகவே சிரிப்பு பொங்கியது. இப்படி தானகவே ரசித்துச் சிரிக்கவேண்டிய அவசியம் -அவ்வாறு சிரிக்கும்படி தூண்டுகிற உந்துதல்-அடிக்கடி தலேகாட்டியது.

லோட்டா பெரியதாக இருந்தது. தம்ளரும் (-லெச்சண மில்லாம, சொள்ளமாடன்மாதிரி) உயரமா, பெரிசாக, விளிம்பே இல்லாமல் இருந்தது.

- கால்படி புடிக்கும். அப்போல்லாம் வீட்டுக்கு வாறவங்க இந்தத் தம்ளர் நிறைய நீத்தண்ணி யை (" நீராகாரம்:சோற்றுப் பானையில் உள்ள தண்ணிர்) மடக்மடக்குன்னு குடிச் சுப்போடுவாங்க. வாறவங்களுக்கு இது நெறைய மோரு கொடுப்பாங்க. குடிக்கத்தான். அப்போ, காபி ஏது ? இப்ப இதுமாதிரித் தம்ளர்களும் இல்லே. விருந்தாளிகளிலுைம் வீட்டாள்களாலும் இந்தப் பெரிய தம்ளர் முட்ட எதையும்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/66&oldid=589310" இலிருந்து மீள்விக்கப்பட்டது