பக்கம்:நினைவுச்சரம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நோக்குகளில், போக்குகளில் எல்லாம் மாற்றமே பெருத அடிப்படைத் தன்மைகளும் இருக்கின்றன.

நாற்பது வருடகாலம் ஒருவன் ஒரு ஊரைவிட்டு விலகி யிருந்தபின்னர்,அந்த ஊருக்கு அவன் திரும்பிவர நேர்ந்தால் அவனது அனுபவங்கள் எவ்வாறு இருக்கும்? அந்த ஊரைப் பற்றிய, அவனுக்கு முன்பு பழக்கமாகியிருந்த வீடு வாசல், தெரு, சுற்றுப்புறங்கள் பற்றிய நினைப்புகள் எவ்வாறு இருக்கும்? அவன் நன்கு அறிந்திருந்த மனிதர்களைப் பற்றிய எண்ணங்கள் எவ்வாறு இருக்கும்? வாழ்க்கையில் அடிபட்டு, பெருத்த மாறுதல்களைப் பெற்றிருக்கக்கூடிய அவனுடைய சிந்தனேகள் எப்படி இருக்கும் ?

இவை எல்லாம் எண்ணிப் பார்ப்பதற்கு ரசமான விஷ பங்கள். இத்தகைய எண்ண ஓட்டத்தின் விளைவாகத்தான் * நினேவுச்சரம் நாவல் பிறந்தது.

சொந்த ஊரைவிட்டு இருட்டோடு வெளியேற நேர்ந்த ஒருவன், நாற்பது வருடங்கள் அந்த ஊர்ப்பக்கமே எட்டிப் பாராது இருந்தான். இடைக்காலத்தில் பணமும் அதனல் அந்தஸ்தும் சேர, பெரிய மனிதர் ஆகி ஊர் திரும்பிய போது, அந்த நபருக்கு எதிர்ப்பட்ட கட்சிகளும் மனிதர் களும், அவையும் அவர்களும் அவர் உள்ளத்தில் எழுப்புகிற நினவுகளும் நினைவுச்சரம்” ஆக அமைந்துள்ளது.

ஊர்க்காரர்களின் போக்கினுல் சொந்த ஊரைவிட்டே வெளியேறின்ை மயிலேறு, அப்போது அவன் தவறு எதுவும் செய்திருக்கவில்லை. என்ருலும், ஊர்க்காரர்களே எதிர்த்து நிற்கக்கூடிய வலு அன்று அவனுக்கு இருக்கவில்லே.

நாற்பது வருடங்களுக்குப் பிறகு அந்தஸ்தோடு ஊர் திரும்பிய மயிலேறும் பெருமாள்பிள்ளை, மறுபடியும் அதே மாதிரியான குற்றச்சாட்டைச்சந்திக்க நேரிடுகிறது. ஊர்காரர் களின் சிறுமைப்போக்கு, காலவேகத்திலுைம் மாற்றப்பட வில்லை என்பதை உணருகிருர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/7&oldid=589246" இலிருந்து மீள்விக்கப்பட்டது