பக்கம்:நினைவுச்சரம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 நினைவுச்

மறுநாள் முதல் நேர்த்தியான மல்லிகைப் பூச்சரம் சாயங் காலம் நான்கு மணிக்கே கிடைக்கலாயிற்று.

நல்ல நாளாக ஒரு வெள்ளிக்கிழமையன்று மன. பெளு. தன் வீட்டில், ரொம்ப காலத்துக்குப் பிறகு, மீண்டும் குத்து விளக்கு ஏற்றினர். அதை ஒரு விசேஷமாகவே கொண் டாடினர். -

கடலேப்பருப்பை வேகவைத்து, சிறிது உப்புச் சேர்த்து, தேங்காயை துருவிப் பூப்பூவாக எடுத்து மிக நிறையவே கலந்து, தாளித்துப் பக்குவம் பண்ணினர். பூம்பருப்பு’ கழகமவென்று வாசனையோடு ஜோராக இருந்தது. அருமை பான காப்பியும் தயாரித்திருந்தார்.

குத்துவிளக்கை, அவர் அம்மா செய்ததுபோல உமி போட்டுத் தேய்த்து மினுமினுப்பாக்கவில்லை. பித்தளைப் பாத்திரங்களே பள பளப்பாக்குவதற்கென்று வந்துள்ள நவ யுகத் தயாரிப்புகளில் ஒன்றையே அவரும் பயன்படுத்தினர்.

முன்யோசஃனயோடு திட்டமிட்டு எந்தக் காரியத்தையும் செய்து பழகியிருந்த மயிலேறும் பெருமாள் பிள்ளை சிவபுரம் முகாமுக்கு வேண்டிய ஏற்பாடுகளையும் யோசித்து யோசித்துச் செய்து முடித்திருந்தார். சமையலுக்குத் தேவைப்படக் கூடிய பொருள்கள்-சாம்பார் பொடி, புளியிட்ட கறிக்கான தயாரிப்பு, ரசப்பொடி, முளவொடி’ (மிளகுபொடிஅதாவது, தோசை இட்லி சாப்பிடுவதற்குத் துணை ஆகும் மிளகாய்ப் பொடித் தயாரிப்பு) போன்றவற்றையும், பிராஸோ -விம்போன்ற சுத்தப்படுத்தும் சாதனங்களேயும், டெட்ஸர்ஃப் போன்ற சோப்புத் தூள்களேயும், இன்னும் இதர தேவைப் பொருள்களேயும் சேகரித்து, நன்ருக பேக் செய்து’, லாரி பார்சலாகத் தன் பெயருக்கு மதுரையிலிருந்து அனுப்பி வைத்தார். சிவபுரத்துக்கு வந்த மறுநாள் அதை டெலிவரி? எடுத்துக் கொண்டார். மண் எண் ண ஸ்டவ்வும் வந் திருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/70&oldid=589314" இலிருந்து மீள்விக்கப்பட்டது