பக்கம்:நினைவுச்சரம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 நினைவுக்

துப்பயலுக்குப் பொறந்த பய! சாகமாட்டாம அலேயுதான். பொழுது போகலேன்ன இங்கே வந்திரதுதான் சோவி' என்று பெரிய பிள்ளை மனம் சில சமயம் அலுத்துக்கொள்வதும் உண்டு. என்ருலும் கூட: பொதுவாக அனைவரையும்: சந்தோஷமாக வரவேற்றுப்பேசி மகிழ்வதுதான் அவரது சுபாவமாக அமைந்திருந்தது.

அன்றும் பலரையும் வரவேற்று உபசரித்தார். எல்லாரும்: காப்பி சாப்பிட்ட பிறகு விட்டாத்தியா? உட்கார்ந்து பேசிக் களித்தார்கள்.

அழகான விளக்கண்ணுச்சி. இவ்வளவு உசரமான குத்துவிளக்கை நான் வீடுகளிலே பார்த்ததில்லை. கோயிலில் தான் பார்த்திருக்கேன் என்று சுகவாசி குறிப்பிட்டார்.

கோயில்களிலே விளக்குகள் பெரிசு பெரிசா இருக்கு. ஆணு இவ்வளவு லெச்சணமா இருப்பதில்லை. இதிலே தலை, மூக்குகள், தண்டு-அந்தத் தண்டைப் பாருங்க, நெளிவு நெளிவா, அழகா-ஆகா, விளக்கையே பார்த்துக்கிட்டிருக் கனும் போலே இருக்குதே என்று பிறவியா பிள்ளை பரவச முற்ருர்,

இது எந்த ஊரு விளக்கு அண்ணுச்சி?’ என்று விசாரித். தார் ஒரு தம்பிச்சி’.

ஏரல்லே ஒரு ஆசாரி செய்து கொடுத்தது. ஸ்பெஷலாச் சொல்லிச் செய்தது. ஐம்பது வருஷங்களுக்கு முன்னுலே. இருபத்தஞ்சு ரூபாதான் ஆச்சு. அப்போ அந்தக் காலத். திலே ஒரு விளக்குக்கு இருபத்தஞ்சு ரூபாங்கிறது அதிகம் தான். அப்படித்தான் அப்போ ரொம்பப் பேரு சொன்னுங்க” என்ருர் மா. பெ.

竣 ஆங்? இருபத்தஞ்சு?...வெறும் இருபத்தஞ்சு.இருபத் தஞ்சே இருபத்தஞ்சு தான, ஹேங்! என்று குரல்களில் வியப்பு வெடித்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/72&oldid=589316" இலிருந்து மீள்விக்கப்பட்டது