பக்கம்:நினைவுச்சரம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரம் 75.

னிர்க் குளத்தின் சிறுமீன் சினையினும் நுண்ணிதே ஆயினும்: ...உ.ம்..உ.ம்...அப்புறம்...வந்து...அணிதேர்ப்புரவி ஆட்பெரும் படையோடு மன்னருக்கிருக்க நிழலாகுமேன்னு வரும். பாட்டு எப்படியும் போகட்டும். நான் சொல்ல வந்தது, ஆலமரம் மன்னருக்குப் பெரும்படையோடு இருக்க நிழலாகும். அப்படி அதன் நிழலே அனுபவிக்க, அணிதேர்ப்புரவி ஆட்பெரும் படையோடு அதன் கீழ் தங்குவதற்கு இப்போ மன்னர்கள் இல்லை என்பதனலே, இந்நாட்டு மன்னர்கள் ஆகிவிட்ட ஏழை எளிய மக்கள், ஆடு எரி படர்ந்த தங்கள் வீட்டுக் கோடுயர் அடுப்பு எரியவேண்டுமே என்பதற்காக ஆலமரங் களே வெட்டி விறகாக்கிப் போட்டார்கள். ஆகவே, ஆலம் ரம் எப்போதும் மன்னருக்கு உதவும் பெரிய மரமே ஆகும்னு எனக்குப் பட்டுது. எப்படி அண்ணுச்சி : என்று ப. லே. பால்வண்ணம் பெரியதனம் பண்ணினர்.

அந்தக் கூட்டத்தில் அவரது மூளையின் மின்வெட்டு பிரகா சிக்கவில்லே.

சாலை அழகு போயிட்டாலும் அண்ணுச்சி, வேருெரு அழகு சேர்ந்திருக்கே, அதை நீங்க கவனிக்கலே ?? என்று சூரியன் பிள்ளை வாய் திறந்தார். இருட்டினதும் மேற்கே பார்த்தால் என்னமாயிருக்கு இரவு பூரா எப்படி ஜோதி மயமா இருக்கு அதிகாலையிலே கூட கண்கொள்ளக் காட்சி யாயிருக்கே 12 -

சிமெண்ட் ஆபீஸ் விளக்கு வெளிச்சத்தைச் சொல்றேளா? ஆமா ஆமா. வடக்கே கார்பைட் பாக்டரி முடிய ஒரே லேட்டு மயம்தான். எவ்வளவு தூரம், எவ்வளவு லேட்டு அடுக்குகள். எப்படிக்கிடந்த தாழையூத்து சங்கர் நகர்னு மாறி, டவுண் கணக்கா வளர்ந்துட்டுதே! என்று பிறவியா பிள்ளை அதிசயித்தார். -

ஊம். நானும் பார்த்தேன். இப்போ சுற்றிவர எங்கே பார்வையை திருப்பிலுைம் எலெக்ட்ரிக் விளக்குகள் பிரகா சமா எரியிறதை காணமுடியுது. தாழையூத்து விளக்குகள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/75&oldid=589319" இலிருந்து மீள்விக்கப்பட்டது