பக்கம்:நினைவுச்சரம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 - - நினைவுச்

சிமிண்ட் கம்பெனியின் ஏகப்பட்ட இலட்டுகள், தொடர்ந்து விதம் விதமான வெளிச்சம். மறுபடியும், கார்பைட் பாக்டரி யின் அதிகமான விளக்குகள். நம்ம ஊரின் தெரு விளக்குகள் கிழக்கேயும் வரிசையா விளக்குகள். அப்புறம், பாலாமடை லேட்டுகள். தென்கரையிலே தெரியிற வெளிச்சம். அங்கே யும் இங்கேயுமா மினுக்குற லேட்டுகள்-ஒரே வெளிச்ச மயமாத் தானிருக்கு. நீங்க சொன்னது போல இதிலேயும் ஒரு அழகு இருக்கத்தான் செய்யுது. நான் இல்லேன்னு சொல்லலே. ஆல்ை இழந்துபோன இனிமை இழக்கப்பட்டதேதான். அதுக்கு ஈடு சோடு கிடையவே கிடையாது என்று பெரிய பிள்ளை அழுத்தமாக அபிப்பிராயப்பட்டார்.

சிவபுரத்துக்கு எலெக்ட்ரிக் லேட் வந்தது பற்றி பேச்சு நீண்டது.

இப்போ கிராமங்களுக்கும் எலெக்ட்ரிக் லேட்டுகள் போடுவதுங்கிறது அரசின் வேலைத்திட்டம் ஆகிவிட்டது. அப்போ அப்படி இல்லை. நம்ம ஊருக்கு லேட் வாறதுக்குள்ளே எவ்வளவு யோசனைகள், எத்தனை சிபாரிசுகள். பிரைவேட் கம்பெனிக்காரன்தானே அந்த வேலையை மேற்கொள்ள, வேண்டியிருந்தது? அவன் லாபத்திலேதான் குறியா இருந் தான். இந்த ஊருக்கு வயர் இழுத்து, கரண்ட் கொண்டாற துக்கு ஏகப்பட்ட செலவாகுமே ; அப்படிக் கொண்டாந்தால் அதுக்குத் தக்க வருமானம் இருக்குமா ? எத்தனை வீடுகளிலே வயரிங்பண்ணி, கனெக்ஷன் வாங்கி, லேட் எரிக்கத் தயாரா யிருப்பாங்க ?ன்னெல்லாம் விசாரிச்சு யோசனே பண்ணினன். யார் யார் வீட்டிலே எலெக்ட்ரிக் லேட் போடுவாங்கன்னு கேட்டு எழுதிக்கிட்டு போனன். அப்படியும் அந்த வருசம் குழிதோண்டி, கம்பங்கள் நட்டு வயர் இழுக்கலே நம்ம ஊருக்கு, ஒரு வருசத்துக்கும் மேலேயே ஆணப்புறம்தான் வந்துது என்று சுகவாசி சொன்னர்.

அப்போ அவனுக்கு தெரு விளக்குகள் முக்கியமாப் படலே அண்ணுச்சி. கம்பெனிக்கு வரும்படி அதிகரிக்கும்படி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/76&oldid=589320" இலிருந்து மீள்விக்கப்பட்டது