பக்கம்:நினைவுச்சரம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 நினைவுச்

பண்ணி, லேட்டு போடுதே? எரிக்க வேண்டியதுதானே? கீல்ட் எரிக்கதுக்கு மனம் வாறதுல்லே. அடுத்த வீட்டிலே விளக்கெரிய ஆத்துமா பொறுக்காதுன்னு சொல்வாங்க. இங்கே அநேகம் பேருக்கு தன் வீட்டிலே நல்லா விளக் கெரியவே பொறுக்கிறதில்லே. அணேச்சு அணைச்சு வைப் பாங்க. இருட்டிலே உக்காந்து பேசிக்கிட்டிருப் பாங்க. ஏழரை எட்டுக்குள்ளாற எல்லா விளக்குகளையும் அணேச்சிருவாங்க. ஒரே ஒரு லேட்டாவது எரியட்டுமே ! ஊகுங், கரன்ட் சார்ஜு ஏறிப்போகும்னு பயப்படுவாங்க. அநேக வீடுகள்லே மாசம் தோறும் யூனிட்டு 8 யூனிட்டுதான் பில் கணக்காகும். பில் வசூலிக்கிறவனே ஒருசமயம் கேட்டான், என்னய்யா உங்க ஊரிலே வீடுகளிலே விளக்கே எரிக்க மாட்டீங்களோ? ரெண்டு யூனிட்டும் மூணுயூனிட்டும்னு வருதேயின்னன்.இருட்டிலேயே வாழ்ந்து பழக்கம்லா ; வெளிச்சம் இன்னும் பழக்கமாகலே ; அதுதான் கூசுதுன்னு சொன்னேன். வே, மினிமம் சார்ஜுஇப்ப மூனரை. சில வருசத்துக்கு முன்னலே ரெண்டா ரூபா தான் (ரெண்டரை)-எப்படியும் கட்டித்தான் ஆகணும். நீரு ஆறு யூனிட் எரிச்சாலும் அதே ரூபாதான் ; ரெண்டு யூனிட் எரிச்சாலும் அதுதான் ; எரிக்காமலே இருந்தாலும் அதைத் கட்டியாகணும். ரெண்டு யூனிட்டும், ரெண்டரை யூனிட்டும் எரிச்சிட்டு அந்தப் பணத்தை கட்டி நஷ்டப்படுவானேன்? ஆறு யூனிட், ஏழு யூனிட் வாறவரை தாராளமா எரியேன். அதே மினிமம் சார்ஜுதானே கட்டப்போறே ! இது நம்மிள வங்க மனசிலே உறைக்கிறதே இல்லே. நானும் எத்தனையோ தடவை சொல்லிப் பார்த்தாச்சு. லேட்டை ஆஃப் பண்ணு, லேட்டை ஆஃப் பண்ணுன்னுதான் துடிக்கிருங்க. விளக்குகள் எரிஞ்சு, வெளிச்சமா இருந்தா எப்படி இருக்கு? இருட்டாக் கிடந்த எப்படி இருக்கு?’ என்று பால்வண்ணம் பிள்ளே தன்னே வெளிச்சப்படுத்திக் கொண்டார்.

விளக்கெரிஞ்சு கெட்டவனும் இல்லே, வாழ (வாழை) வச்சு கெட்டவனுமில்லே 'ன்னு பெரியவங்க சொல்லியிருக் காங்க ? என்ருர் சூரியன் பிள்ளை. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/78&oldid=589322" இலிருந்து மீள்விக்கப்பட்டது