பக்கம்:நினைவுச்சரம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

沙

சரக 79

இதுக்கு ரெண்டு பொருள் இருக்கும்னு தோணுது. வாழை வச்சால், பல வகைகளில் வருமானம் கிடைக்கும். இலை, பூ, காய், பழம், கடைசியிலே தண்டு-இப்படி எல் லாத்தையும் பணம் பண்ணிப்போடலாம். அதனுலே நஷ்டப் பட்டுக் கெடமாட்டான். விளக்கு எரிக்கிறதுளுலேயும் வெளிச்சம் ஏற்படும். லட்சுமிகரமா இருக்கும். கேடு உண் டாகாது. இது ஒரு அர்த்தம் ஆச்சா? விளக்கு எரிக்கிறது குலே இருட்டு இருக்காது ; திருட்டுப்பயல் வரமாட்டான். வாழவச்சு-அதாவது, இன்னுெருவனுக்கு அல்லது பிற பலருக்கு வாழ்வு அளித்து-வேலை வாங்கிக் கொடுத்தோ, எவ்வகையிலாவது உதவி பண்ணியோ குடியும் குடித்தனமுமா வாழும்படிச் செய்து உபகாரம் பண்ணுகிறவனும் கெட்டுப் போவதில்லை’ என்று பால்வண்ணர் தன் அறிவுத்திறனே காட்டினர்.

இருக்கலாம். அது எப்படியும் இருந்துட்டுப் போகுது. எலெக்ட்ரிக்லேட் வெளிச்சம் இல்லாத காலத்திலே நம்ம ஊரு எப்படி இருந்துது? அந்தக் காட்சியை உங்களாலே நெனச் சுப்பார்க்க முடியுதா?’ என்று மன. பென. கேட்டார்.

அதை மறந்திடாதீங்க சாமிகளேன்னு கம்பெனிக் காரனே அடிக்கடி நினைவுபடுத்துருனே! மாசத்திலே ஒரு நாள் ரெண்டு நாள் திடீர்னு எல்லா லட்டும் இல்லாமலே போயிரும். வீட்டு விளக்கு, தெரு விளக்கு எல்லாமே அணஞ்சுபோம். மணிக்கணக்கிலே கரண்ட் வராது. அந்தச் சமயத்திலே ஊரின் பூர்வ நிலையை-இருட்டின் ஆளுகையை -ரசிக்க முடியுதே! நிலாக்காலத்திலே அப்படி ஆயிட்டா, செயற்கை வெளிச்சங்கள் இல்லாத இரவில், பாலுபோல நிலா அடிக்கையில், தெருக்களும் வீடுகளும் சுற்றுப்புறங் களும் எவ்வளவு ஜோரா அற்புதமா இருக்கு என்பதையும் கண்டு சந்தோஷப்படலாமே என்று பட்டுலேஞ்சி லெக்ச ரடித்தார். . ...

'ஊம்ம் என்று இழுத்தார் மயிலேறும் பெருமாள். நம்மை அறியாமலே மாறுதல்கள் ஏற்பட்டுக்கிட்டேதான் இருக்கு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/79&oldid=589323" இலிருந்து மீள்விக்கப்பட்டது