பக்கம்:நினைவுச்சரம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

سياسh * #

காலங்கள் மாறினலும், சுற்றுப்புறங்களில் குறிப்பிடத் தகுந்த மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், சமூக மனிதரின் அடிப்படையான சில தன்மைகள் மாறுவதில்லை. மனித குணங்கள் பெருத்த மாறுதல்களே அடைந்து விடுவதில்லே.

வளர்ச்சி பெற்றிருந்த மயிலேறும் பெருமாள் இப்போது சமூகத்தை, ஊர்க்காரர்களை எதிர்த்து நின்று, தான் நினேத் ததைச் செய்து முடிக்கும் வலிமையைப் பெற்றிருந்தார். பணமும், அது பெற்றுத் தந்திருந்த அந்தஸ்தும் அவருக்கு அந்த பலத்தைக் கொடுத்தன.

நல்லனவற்றை செய்வதற்கு துணிச்சல் வேண்டும். தீய காரியங்களே செய்து முடிப்பதற்கும் துணிவு வேண்டும். பணம் இரண்டுக்குமே துணையாக அமைகிறது. பண பலம் இல்லாததனால், பல நல்ல காரியங்கள் செயலுருப் பெருமலே போகின்றன.

மயிலேறும் பெருமாளிடம் துணிவு இருந்தது. அதற்குத் துணையாகப் பணமும் சேர்ந்திருந்தது. அதனல், ஊராரையும் உறவினரையும் எதிர்த்து நின்று, தான் நினைத்தவாறே நல்ல செயலேச் சாதிக்க முடிந்தது.

இந்த உண்மையை நினைவுச்சரம் சுவையாக எடுத்துச் சொல்கிறது.

அது ஒரு தனி மனிதனின் கதை மட்டுமல்ல. ஒரு ஊரின் சமுதாயச் சித்திரம். அத்துடன் ஒரு வட்டாரத்தின் வரலாற்றுச் சித்திரமும் கூட. நாவலேப் படிக்கிறபோதே இதை உணரமுடியும்.

இந்த நாவலே அழகான முறையில் புத்தகமாக்கியுள்ள பூம்புகார் பிரசுரத்துக்கு என் நன்றி உரியது.

சென்னே,

  • * வல்லிக்கண்ணன் மார்ச், 1979 缀
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/8&oldid=589248" இலிருந்து மீள்விக்கப்பட்டது