பக்கம்:நினைவுச்சரம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 - நினைவுச்

இல்லே, மாறுதல்கள் சதா ஏற்பட்டபடியேதான் இருக்கு, அதுகளை நாம் கருத்தில் கொள்றதில்லேன்னு சொல்லனும்: இந்த ஊருக்கு எலெக்ட்ரிக் லேட், குடிதண்ணிர் பைப் வசதி யும் ஏற்பட்டிருப்பது பெரிய மாறுதல் அல்லது வளர்ச்சிதான். முன்னலே லேட்டே கிடையாது. தெருவெல்லாம் இருட்டு தான். வீடுகளிலும் இருட்டுதான். விளக்குகள் எரிக்க வசதி இருக்காது. அல்லது, பால்வண்ணம் சொன்னது மாதிரி, விளக்குகளை எரியவிட்டு வெளிச்சம் பரப்புவதற்கு மனம் இருக்காது. ரொம்ப காலத்துக்கு முன்குடி, தெருச்சந்தி களிலே, முக்குகளிலே தெரு விளக்குகள் எரியும். லாந்தக் கம்பங்க்ள்ட்கல்தூண்கள்-நிற்கும். அதிலே மேலே, இரும்புச் சட்டங்கள், அதுக்குள்ளே பாதுகாப்பா, தனிவடிவில் உள்ள கண்ணுடிக்கூண்டு. திறக்க, மூட, வசதியோடு. அதை திறந்து உள்ளாற விளக்கு வைப்பாங்க. தகர விளக்கு. கண்ணுடி சிம்னி. கிராமப் பஞ்சாயத்து ஏற்பாடு இது. டவுண் களிலே, முனிசிபாலிடி வேலை. இதுக்குன்னு ஒரு ஆளு உண்டு. ஏணியை தோளில்ே மாட்டிகிட்டு: விளக்குகளின் தகரப்பகுதிகளே-மண் எண்ண அடைக்க உதவுவ்து-ஒரு கூடையிலே சுமந்து வருவான். சிமினி, லாந்தல் கம்பத்தில், கண்ணுடிக் கூண்டுக்குள் ஒரு மூலையில் இருக்கும். எண்ணே அடைக்கனும்கிறதுக்காகத்தான் தினம் காலேயில் வந்து தகரப்பகுதியை-பார்க்கப்போல்ை, அதுதானே விளக்கு?ங் கிறது :-ஆபீசுக்கு எடுத்துக்கிட்டுப் போவான். இந்த ஊரிலே அப்படிப்பட்ட லட்டுகள் எரிந்து கொண்டிருந்ததையும் நான் பார்த்திருக்கேன்...” . . .

‘ஒரு விஷயம் அண்ணுச்சி என்று குறுக்குச் சால் ஒட்டினர் பால் வண்ணம். தெரு விளக்குகள் கிராமங்களில் பத்திரமா, யாராலும் எவ்விதமான சேட்டையும் செய்யப்படா மல், இருந்திருக்கும். டவுன்களில் தெரு விளக்குகள், தெருவுக்கு அழுது வழியிற வெளிச்சம் தருகிற காரியத்தை மட்டுமே செய்து கொண்டிருந்ததில்லை. அப்படி கருமமே கண்ணுக இருக்கும்படி அவைகளே விட்டு வைப்பதில்லே சில

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/80&oldid=589324" இலிருந்து மீள்விக்கப்பட்டது