பக்கம்:நினைவுச்சரம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$2 நினைவுக்க

இதை அனைவரும் ரசித்துச் சிரித்தார்கள். எலெக்ட்ரிக். லேட்டிலேயே பழகிப் போட்டு, திடீர்னு அது இல்லாமல் போகிறபோது பெட்ரூம் லேட்டுகளேயும் அரிக்கன் லாந்தரை யும் மெழுகுவத்திகளையும் வச்சு ஒப்பேத்த நேரிடுகிறபோது, சொம்பவும் சிரமமாகத் தான் இருக்கு. எலெக்ட்ரிக் லேட்டுக. இல்லாமல் இருந்த காலத்தில் வாழ்க்கை எவ்வளவு கஷ்டமாகஇருந்திருக்கும்னு நினைக்கத் தோணுது என்று ஒருவர் குறிப் பிட்டார். வயது குறைந்த நபர் அவர்.

'நீங்க நினைக்கிறபடி ஒண்னுமில்லை. அப்பவும் வசதி: களுக்குக் குசைச்சல் இல்லே. அழகும் அலங்காரமும் ஜாம். ஜாம்னு நடைபெற்றுக் கொண்டு தான் இருந்தன. தீவட்டிகள், தீப்பந்தங்கள், கிளே விளக்குகள், பலபல கிளே களைக் கொண்ட லஸ்தர் விளக்குகள், சர விளக்குகள்-- அடுக்கு அடுக்கான விளக்குகள் எவ்வளவு அழகா, அலங் காரமா, குளுகுளுன்னு பிரகாசிக்க முடியும்கிறதை பார்க்க னும்னு, கன்யாகுமரி கோயிலுக்குள்ளே போய் நின்னு பாரும்: என்ருர் பால்வண்ணர்.

'ஏன், திருக்கார்த்திகை தினத்து இரவிலே எந்த ஊரிலும் பார்க்க முடியுமே. அதிலும் அக்கிரகாரங்களில் கண் கொள்ளாக் காட்சியாக ஜொலிக்கும்’ என்று ஒருவர் தெரிவித்தார்.

'எந்தக் காலத்திலுமே மனிதர்கள் இருக்கிறதை வச்சுஅமர்க்களம் பண்ணிப் போடுவாங்கண்ணு தான் தோணுது. இப்போ எலெக்ட்ரிக் பல்புகளைப் போட்டு, கட்டிடங்களையும் கோபுரங்களையும் மரங்களேயும் ஒளி மயமாக்கி விடுருங்க. அந் நாளேயிலும் வெளிச்சம் போடுறதுக்கு மனுசங்க அஞ்சினது" மில்லை தயங்கியதுமில்லை என்று பால்வண்ணம் பிள்ளே ஓங்கி, அடித்தார்.

'அறுபது அறுபத்திரண்டு வருஷங்களுக்கு முந்தி திருநெல்வேலியிலே ஒரு கல்யாணம் நடந்தது. பிள்ளேயன் வீட்டுக் கல்யாணம். பிள்ளையன் குடும்பம் அப்போ ரொம்ப

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/82&oldid=589326" இலிருந்து மீள்விக்கப்பட்டது