பக்கம்:நினைவுச்சரம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரம் 83.

வும் செயலாயிருந்துது. கல்யாணம்னு சொன்கு அந்தக் காலத்திலே நடந்தது.கதான் கல்யாணம். இப்ப நடக்கிற தெல்லாம் சும்மா கண் துடைப்பு நாடகம் மாதிரித்தான். பணக்காரரான பிள்ளேயன் வீட்டிலே கல்யாணம். சொல்லனுமா? பட்டணப் பிரவேசத்துக்காக-பட்டனப் பிரவேசம் என்கிற அயிட்டமே இப்ப அடிபட்டுப் போக்கே!நாலு ரத வீதியிலும் வெளிச்சம் திகுதிகுன்னு இருக்கிறதுக்காக ஒரு வேலே பண்ணியிருந்தாங்க பாருங்க, சே!, பிரமாதம். அது மாதிரி அப்புறம் எங்கும் நடந்ததா நான் பார்த்தது மில்ல்ே ; கேள்விப்பட்டதும் இல்லே. வாழை மரங்களே பெரிசா தடிதடியா வளர்ந்ததுகளைத்தான், வெட்டி அடி மரங்களே, நம்ம இடுப்பு உசரத்துக்கு வரும்னு வையுமேன், சதவீதிகளிலே நெடுக நட்டுவச்சாங்க. ரெண்டு பக்கமும். அதுக்கு மேலே தீச் சட்டிகள். எண்ணே நிறைய ஊத்தி, பந்தம் கட்டிப்போட்டு, எரியவிட்டிருந்தாங்க கவனிச்சு எண்ணை ஊத்திக்கிட்டே இருக்கிறதுக்கு ஆளுக. ஏகப்பட்ட வாழை அடிமரங்கள் மேலே, தீச்சட்டிகளிலே, தி குதிச்சுக் குதிச்சு விளையாடி வெளிச்சம் தந்துக்கிட்டிருக்கு. பட்டணப் பிரவேசம்-அருமையான குதிரைகள் பூட்டின சாரட்டிலே, ஏகப்பட்ட புஷ்ப அலங்காரங்களோட, பொண்ணும் மாப்பிள்ளேயும் ஜம்னு இருக்க, பிள்ளையனும் மற்றப் பெரிய மனுஷங்களும் சொந்தக்காரங்களுமா அசைஞ்சு நகர்ந்து வருது. அப்போ, அதோட கலந்துக்கிடனுமின்னு சொல்லி, கொட்டாரம் குருக்களேயாவும் அவரை சேர்ந்தவங்களும் எதிரே வந்தாங்க. பிள்ளையன் சேவரத்துக்கு குருக்களேயா தான் குரு. அதிலும், கொட்டாரம் குருக்கள் தான். ஐயர் எல்லாம் கிடையாது. குருக்களையா வாறதை பார்த்ததும், குலகுரு இல்லேயா, பெரிய பிள்ளையன் தோளில்ே கிடந்த பட்டை எடுத்து இடுப்பிலே கட்டிக்கிட்டு, அங்கேயே சாஷ் டாங்கமா விழுந்து கும்பிட்டாரு. அவர் குடும்பத்தாரும் சொந் தக்காரங்களும் அவரை பின்பற்றி, கீழே விழுந்து நமஸ்காரம் பண்ணினங்க. அப்ப நடந்தது பாருங்க ஒரு அதிசயம். வேடிக்கைன்னும் சொல்லலாம். அதிசயமா வாழை மரங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/83&oldid=589327" இலிருந்து மீள்விக்கப்பட்டது