பக்கம்:நினைவுச்சரம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 நினைவுச்

களிலே தீச்சட்டி வச்சு, கோலாகலமா வாற பட்டணப் பிரவேசத்தை பார்க்க ரதவீதியின் ரெண்டு பக்கங்களிலும் எக்கச்சக்கமாகக் கூட்டம் கூடி நிக்குது. ஆம்பிளேகளும் பொம்பிளேகளும் குஞ்சுகுளுவான்களுமா ஒரே கும்பல். பெரிய பிள்ளேயனும், இதரப் பணக்காரப் பெரியவங்களும் ரோட்டி லேயே விழுந்து கும்பிட்டதை பார்த்தாங்களோ இல்லையோ, ஒகோ, இவர் யாரோ பெரிய மகானகத்தான் இருக்கணும்இல்லேன்கு, இவ்வளவு பெரிய பெரிய பணக்காரங்க, மதிப் புக்கும் மரியாதைக்கும் உரியவங்க அத்தனே பேரும் இப்படி கீழே விழுந்து கும்பிடுவாங்களான்னு சனங்க நெனச்சு, அப்படி அப்படியே அந்த அந்த இடத்திலேயே எல்லோரும், ‘சாமீ சாமீன்னு க்த்திக்கிட்டு விழுந்து கும்பிட ஆரம்பிச்சிட் டாங்க. எல்லாரும்,ை எல்லா ஆம்பிளேகளும் பொம்பிளே களும் குஞ்சுகுளுவான்களும் தான்...அஹஹ, நல்ல தமா வடிான காட்சியா இருந்தது அது." - с

மயிலேறும் பெருமாள் பிள்ளே இதைச் சொல்லிவிட்டு, அந்த தமாஷை இப்போது கண்முன் காண்பது போல், குலுங்கிக்குலுங்கிச் சிரித்தார். பெரியவர் சிரிக்கிருரே என்ப தற்காக மற்றவர்களும் சேர்ந்து சிரித்தார்கள். -

குத்துவிளக்கு சுடரொளி சிந்தி அழகாக எரிந்து கொண்டி ருந்தது. - * - -

அந்த அழகை ரசித்தும் வியந்தும் சிலாகித்தும் ஒவ்வொருவர் ஒவ்வொன்றைக் கூறிவிட்டு, நேரமாயிட்டுது, அண்ணுச்சி. வாருேம். நாளேக்குப் பார்க்கலாம் என்று விடைபெற்றுப் பிரிந்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/84&oldid=589328" இலிருந்து மீள்விக்கப்பட்டது