பக்கம்:நினைவுச்சரம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரம் 85

7.

கொஞ்ச நேரம் பேச்சும் சிரிப்பும் கலகலப்புமாக இருந்த அந்தப் பெரிய வீட்டில், மற்றவர்கள் போன பிறகு கவிந்து கொண்ட மவுனம் பயங்கரமாக இருந்தது. -

விளக்குகளை அணைத்துவிட்டு கட்டிலில் உட்கார்ந்திருந்த மயிலேறும் பெருமாள் பிள்ளையைச் சுற்றிலும், அவர்மீதும், கனத்துக் கவிந்து இருளோடு இருளாக மவுனம் மண்டிக் கிடப்பதுபோல் தோன்றியது, பகலேவிட இரவில் அதன் சுமை அதிகரித்துவிட்டது போலிருந்தது. மவுனமே ஒரு உருவம் பெற்று நிற்பது போலவும், ஏய் ! என்று கூப்பிட் டால் ஊம்வ்?’ என்ருே, என்ன ?? என்றே அது இடத்தி லிருந்தாவது பதில் குரல் கொடுக்கக்கூடும் என்றுகூட அவர் மனசுக்குப்பட்டது.

அந்த நேரத்தில் அவர் மனம் மனைவி மீனுட்சியை நினைத்தது. அவள் இங்கே வந்து இவ்வீட்டில் தன்னுடன் இருந்தால் இப்பெரிய வீடு இவ்வளவு தனித்ததாக, மவுனம் மண்டிய குகையாகத் தோற்ருது என்று அவர் எண்ணிக் கொண்டார். -

- அவ வரமாட்டா. இங்கே வரவேமாட்டா. அந்தப் பட்டிக்காட்டுப்பய ஊரிலே வீடு என்னத்துக்கு ; தண்ணியை கோதி ஊத்துங்க ; வித்துத் தலைமுழுகித் தொலேயுங்கோன்னு அடிக்கடி புழுபுழுத்த பாதகத்தி யில்லா அவ. இந்த வீட்டை எப்படி நான் வெறும் வீடாக மதிக்கலயோ, அதேமாதிரித் தான் அவளும். இதைத் தனக்கு இயல்பாக வாய்த்துவிட்ட சக்களத்தின்னு நெனச்சுப்போட்டா.

'மயிலேறும் பெருமாள் பெருமூச்செறிந்தார். அவருக்கு இராச்சாப்பாடு வேண்டியிருக்கவில்லை. மிச்சம் இருந்த பூம் பருப்பை தின்று காப்பியை குடித்தார். இன்னும்கூட காப்பி மீந்திருந்தது. ஒரு டம்ளர் இருக்கும். இன்னேக்கு தூக்கமா வரப்போவுது அப்புறமாக் குடிக்கலாம் என்று மூடிவைத்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/85&oldid=589329" இலிருந்து மீள்விக்கப்பட்டது