பக்கம்:நினைவுச்சரம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரம் 87

கட்டிக் கலகலத்துச் சிரித்துச் சத்தம் போட்டு ஓடிவிளையாடும் குமரிப் பொண்ணுகள், சின்னஞ் சிறுசுகள், பெரிய பொம்பிளே கள் இந்த வீட்டுக்கு உயிரும் ஒளியும் ஊட்டியதேயில்லே. அதுக்கு இந்த வீடு கொடுத்து வைத்திருக்க வில்லை...எதுக் கும் கொடுத்துவச்சிருக்கணும்னு சொல்லுவாங்களே, அது சரிதான் போலிருக்கு 1 முதல்லே அப்பாவும் அம்மாவும் மட்டும்...சொந்தக்காரங்க குழந்தையும் குட்டியுமா வந்து இறங்கி வீட்டை கலகலப்பாக்கி யிருப்பாங்கன்னு சொல்றதுக் .கில்லே. நான் பிறந்த பிறகு, ஒத்தைக்காட்டு ஒரியா இருந்: தேன். அப்பா செத்துப்போன பிறகு அம்மையும் நானும் மட்டும்தான். வீட்டுக்கு லெச்சணமா ஒரு மருமக வந்து விளக்கேத்தி வைக்கணுமின்னுதான் அம்மா ஆசைப்பட்டா. அது எங்கே நடந்தது? அம்மை மண்டையை போட்ட பிறகு நான் மட்டுமே இருந்தேன். நாலேஞ்சு வருஷம். அப்புறம் வீட்டை பூட்டிட்டு மதுரையைப் பார்க்க ஒடிப்போனேன். இந்த வீடு நாற்பது வருஷகாலம் பூட்டப்பட்டே கிடந்திருக்கு. பிறவியாபிள்ளை தினம் திறந்துவச்சாரு, அறுப்புக் காலத் திலே நெல்லு கொண்டுவந்து போட்டாங்க, அப்புறம் நெல்ல்ே விலக்கு வாங்க வியாபாரிகள் வந்து போனங்க இன் லுைம், இது மொத்தத்திலே அடைச்சுக்கிடந்த வீடேதான். இப்போ நான் வந்து தங்கியிருக்கேன். அதேைல மட்டும் வீடு கலகலப்பு பெற்றுவிட முடியுமா? இந்த வீட்டிலே ஜீவ

ஒட்டம் துடிப்பாயில்லே. அதுதான் இங்கே முக்கியம்.

சில வீடுகள் அப்படி அமைஞ்சுபோகுது. இந்த ஊரி லேயே இப்படி நாலஞ்சு வீடுகள் கிடக்கு, பெரிசு பெரிசாக் கட்டிப்போட்டிருக்காங்க. ஆன, அதிலே வாழ்ந்து புழங்குற துக்கு ஆட்கள் இல்லே. வீட்டுச் சொந்தக்காரர்க வீட்டை வாடகைக்கு விட விரும்புறதுமில்லே. என்னை மாதிரித்தான்னு வையேன். அதே சமயத்திலே, சில வீடுகளிலே குஞ்சும் குளுவானுமா, பொம்பிளேகளும் ஆம்பிளேகளுமா, இருக்கிற இடம் பத்தாம, ஒரு நெருக்கடி நிலைமை நீடிக்குது. அநேக குடும்பங்களில் நபர்கள் ஜாஸ் தி இருக்கு குடி இருக்க, குச்சு வீடு அல்லது சின்ன வீடுதான் கிடைச்சிருக்கு. டவுண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/87&oldid=589331" இலிருந்து மீள்விக்கப்பட்டது