பக்கம்:நினைவுச்சரம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரம் 9蓬

தியா வாழக் கத்துக்கிடுருங்க. ஆன மனேக்கொடிகளுக்கு அந்த மனப்பான்மை வரவே வராது.

சிவபுரத்திலே மத்தியதர வர்க்கத்துக் குடும்பங்கள் இப் படித்தான் வாழ்க்கை நடத்துது. ஏதோ பெண்டாண்டியும் பிள்ளையுமா, வீடும் வாசலுமா, விசேஷம் கொண்டாட்டம், தல்ல நாள் தீயநாள்னு சொல்லிக்கிட்டு, மற்றவங்க மெச்சனும், கிறதுக்காக, வாழ்ருேம்னு பேர் பண்ணிக்கிட்டிருக்கிருங்களே தவிர, ஒரு குடும்பத்திலாவது அமைதி கிடையாது ; நிம்மதி கிடையாது ; சந்தோஷம் கிடையாது. கடனும் கவலையும் இல்லாத வாழ்வு கிடையாது. நானும் இந்த வீட்டோடு இந்த ஊரிலேயே இருந்திருந்தா, அதே குட்டையில் ஊறிய அதே ரகமான மட்டையாகத்தான் இருந்திருக்கமுடியும். நாற்பது வருஷங்களுக்கு முந்தி,அபாண்டமான ஒரு பழியைச் சுமத்தி என்னேக் கேவலப்படுத்தணும்னு ஆசைப்பட்டதன் மூலம் இந்த ஊர்க்காரனுக எனக்கு நன்மையைத்தான் செய்தாங்க. அதுக்காகவாவது இந்த ஊரையும் ஊர்க்காரனுகளையும் நான் மறக்காமல் இருக்கணும்...

மனு. பெளு. உஷ்ணப் பெருமூச்செறிந்தார்.

வெறும் பயலுக. வெறும் காஞ்சமுர்தாருக என்று கொதிப்போடு முனகிக்கொண்டார். இருட்டும் மெளனமுமே அதைக் கேட்டிருந்தன. *

3

துரக்கம் வராமல் சும்மா உருண்டு புரண்டு கொண்டிருப். பதைவிட, விளக்கைப் போட்டுக்கொண்டு பீரோவையாவது ஒழுங்குபடுத்தலாமே என்ற எண்ணம் மயிலேறும் பெருமாள் பிள்ளைக்கு ஏற்பட்டது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/91&oldid=589335" இலிருந்து மீள்விக்கப்பட்டது