பக்கம்:நினைவுச்சரம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 நினைவுச்

அதுதாஞ்சரி. ஒரு வேலை முடிந்தமாதிரியும் இருக்கும்’ என்று தானுகவே சொல்லியபடி எழுந்து லேட்டை எரியச் செய்தார். மீதம் இருந்த காப்பியை குடித்துவிட்டு, உடனடி பாக தம்னரை அலம்பி வைத்தார்.

அவருக்கு எல்லாமே சுத்தமாக இருக்கவேண்டும். காலே விலே கழுவிக்கிடலாமேன்னு நெனச்சு இதை இப்படியே வச்சிட்டா, எறும்பு வந்து மொய்க்கும்; பாச்சா விழுந்து அசிங்கப்படுத்தும் என்ற நினைப்பு அவர் மனசில் ஒடியது.

பீரோ பட்டாசலில் சுவரோடு சுவராக பதித்துக் கட்டப் பட்டிருந்தது. பெரிய அலமாரி அதில் சப்புச் சவரு லொட்டு லொசுக்கு எல்லாம்-பத்திரப்படுத்தப்பட வேண்டி யனவும் வேண்டாதனவும் ஆக என்னென்னவோ அடைந்து கிடந்தன.

பழைய நோட்டுகள், தபாலில் வந்த கடிதங்கள், புத்த கங்கள், சிறு டப்பாக்கள்...எந்தக் காலத்திலோ வந்த கடிதங் கள்-கல்யாணக் கடிதங்கள், பூப்பு நீராட்டு விழா ? அழைப்புகள், வெறும் கடிதங்கள்...அவற்றை ஒவ்வொன்ருக மேலோட்டமாகப் பார்த்துவிட்டுக் கிழித்தெறிந்தார்.

- இந்த மாப்பிள்ளேகளும் பொண்ணுகளும் இப்ப எப்படி எப்படி இருக்கிறங்களே ! பிள்ளேகுட்டி பெத்து, பேரன் பேத்தி இத்து, கிழவன் கிழவிகள் ஆகி...எத்தனேயோ பேர் செத்தும் போயிருக்கலாம். அவங்க பேருகளே, அவங் களுக்குக் கல்யாணம் என்கிற எந்தக் காலத்திலோ நடந்த ஒரு நிகழ்ச்சிக்கான அழைப்பை, இப்படி நடுச்சாமத்திலே முழிச்சபடி உட்கார்ந்து ஒருவன் வேலே மெனக்கெட்டு, துரக் கத்தையும் கெடுத்துக்கிட்டு, கர்மசிரத்தையாய் படித்துக் கொண்டிருப்பான் என்று சம்பந்தப்பட்டவங்களிலே எவனுமே எவளுமே நினைக்கக்கூட முடியாது. நான்கூட நினைத்த தில்லை. ஆனுல், உலகத்திலே இப்படிப்பட்ட காரியங்களும் -அர்த்தம் உள்ளனவும் அர்த்தம் இல்லாதனவும், பயன் உள்ளனவும் பயனில்லாதனவும் ஆன காரியங்கள்-நடந்து கொண்டுதான் இருக்கின்றன ! .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/92&oldid=589336" இலிருந்து மீள்விக்கப்பட்டது