பக்கம்:நினைவுச்சரம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

494 நினைவுச்

வருஷத்துக்கு முந்திய சரக்குகள் இப்பல்லாம் என்ன காலண்டர் தயாரிக்கானுக! பளீர்னு சாயத்தை மெழுகிவச்சு, இயற்கையிலே இல்லாத மாதிரிக் கலர்களேப் பூசி...இந்த லகக்மியையும் சரஸ்வதியையும் பாரு. என்ன இயல்பான, இதமான வர்ணச் சேர்க்கைகள் : உயிரோடு இருக்கிறமாதிரி, நம்மைப் பார்த்து சிரிச்சுக்கிட்டு, எந்த நிமிஷத்திலும் பேச வாய் திறந்திடுவோம்னு அன்போடு, அருளோடு, குளுமை பாப் பார்த்துக்கிட்டு...தெய்வீகம்கிருகளே, அந்த லட்சணம், அந்த அம்சம் இந்தப் படங்களிலே இருக்கு...ரவிவர்மா படங் களேயே காப்பி அடிச்சு, சொந்தமா லசுஷ்மி சரஸ்வதிகளே வரைந்துவிட்டது மாதிரி ஜம்பமாப் பெயரையும் எழுதி அச் சிட்டு அனுப்பிடுருனுக இப்போ. அது க முகத்திலே ஆழாக்கு அரிசி அருள் கிடையாது. அதுக மூஞ்சியிலேயும் மேலேயும் சுத்தியும் சகட்டு மேனிக்கு வர்ணக்கலவைகள். என்ன ஆர்ட்டோ, எழவோ! வரவர ஜனங்களின் டேஸ்ட்டே கெட்டுப்போச்சு :

மேலும் பல தாள்களே எடுத்துப் பார்த்துக் கிழித்துப் போட்டார். அலமாரியின் ஒரு தட்டில், ஒரு ஒரத்தில், சுருண்டு மடங்கிக்கிடந்த ஒரு அலங்காரப் பொருள் அவர் கவனத்தைக் கவர்ந்தது.

சீனுவிலிருந்தோ, ஜப்பானிலிருந்தோ வந்துகொண் டிருந்தன. அவை, அந்தக் காலத்தில். மூங்கிலே சன்னமாக, காகிதம்மாதிரி லேசாக, இழைத்து, மிகச் சிறிய துணுக்குகள் ஆக்கி, அவற்றைப் பாய்மாதிரி சேர்த்துத் தைத்து, மூன்றடி நாலடி நீளப்பாய்கள் ஆக்கி, ஆரஞ்சு மஞ்சள் வெளிர் நீலம் போன்ற வசீகர வர்ணங்களில் தோய்த்து எடுத்து, ஒவ் வொன்றிலும் அழகான கலேச்சித்திரங்கள் தீட்டி, விற்பனேக் காக வந்து சேரும். மான்கள், மரங்கள், குடிசை, மலேக் காட்சிகள், பறவைகள்-இப்படி இயற்கையை சித் திரிக்கும் வர்ண ஒவியங்கள். விலை மலிவுதான். அதனுல் மத்தியதரக் குடும்பங்களில், இரண்டு மூன்றென வாங்கி சுவர்களில் தொங்கவிட்டிருப்பார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/94&oldid=589338" இலிருந்து மீள்விக்கப்பட்டது