பக்கம்:நினைவுச்சரம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95 நினைவுச் வெள்ளே அட்டை. துவாரங்கள் நிறைந்தது. அட்டை எந்த அளவிலும்-பெரிசாக, சிறிதாக, நடுத்தரம் என்று: தேவைக்குத் தகுத்தபடி-கிடைக்கும். அட்டைகளே வாங்கி, அவற்றில் மயில், ரயில் என்ஜின், ஸ்டேஷன், மேஜை நாற். காலிகள் கடியாரம் எல்லாம் உள்ள வரவேற்பு அறை , பேபி, கிளி, நாய் என்று படங்களே பென்சிலால் வரைந்து கொள் வார்கள். விதம்விதமான கலர் உல்லன் நூல்களே வைத்து, ஒட்டைகள் வழியாகக் கொடுத்தும் இழுத்தும், சித்திரங் களுக்கு வர்ண உருவம் கொடுப்பார்கள். பேபி, நாய் முதலிய வைகளின் தலை, உடல்பகுதி எல்லாம் சதுர, நீண்ட சதுர முனேகள்-அதாவது, வளைவு நெளிவுகள், கரவு சரிவுகள் இல்லாத-உருவ அமைப்புகளாகத்தான் இப்படங்களில் தென்படும். சில பெண்கள் பெரிய அளவில் சரஸ்வதி, - ல் மி படங்களேக்கூட வர்ண நூல்களால் ஆக்கி, அந்த அட்டைகளுக்கு கண்ணுடி சட்டமிட்டு எடுப்பான இடங்களில் மாட்டிவைப்பது வழக்கமாக இருந்தது. சிலர் படத்தில் தங்கள் பெயரையும் எழுதிப் பின்னுவதை நாகரிகம் எனக் கருதி, இங்கிலீஷ் எழுத்துக்களில் நூல் வேல செய்திருப் பார்கள். அவர்கள் படிப்பும் நாகரிகமும் ரொம்ப முற்றிவிட வில்லே. அந்தக்காலத்திலே என்பதை விஜயாம்பாள் அம். மாள் வள்ளியம்மை அம்மாள். நீலாவதி மீனும்பிகை’ என்று பொறிக்கப்பட்ட எழுத்துக்கள் விளம்பரப்படுத்திக் கொண்டிருந்தன. - - நாகரிகம் முற்றமுற்ற பெண்களது உடைகள்தான் சுருங்கலாயின என்றில்லே. அவர்களது பெயர்களிலும் சில: அம்சங்கள் உதிர்ந்தன; சுருக்கம் பெற்றன. விஜயாம்பாள் அம்மாள் விஜயாம்பாள் ஆகி விஜயா ஆகிவிட்டாள். நீலாவதி நீலா ஆனுள். மீனும்பிகை மீனு ஆகிப்போள்ை. அம்மை, அம்மாள் என்கிற அடைமொழிகள் உதிர்ந்தது நாகரிக ஓட்டத்தினலேதான்.

அவர் கையில் இருந்த அட்டையில், குதிரை உருவம் பிரவுன் நூலினல் பின்னப்பட்டிருந்தது. ஒரு மூலையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/96&oldid=589340" இலிருந்து மீள்விக்கப்பட்டது