பக்கம்:நினைவுச்சரம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

啤8 நினைவுச்

ஒண்ணுதான் இது. கண்ணுடி போட்டு சுவரிலே மாட்டி வைக்கதும்னு கொடுத்தா சங்கமக்கா. அதுக்குக் கண்ணுடி சட்டம் போட வேனே வராமலே போயிட்டுது. பிரமு பெரிய மனு ஆயிட்ட பிறகு, அவ குடும்பத்துக்கும் அம்மைக்கும் ஏதோ தகராறு ஏற்பட்டு பேச்சு வார்த்தையே இல்லாமல் போயி, பிறகு அப்தப் புள்ளேக்குக் கல்யாண ஏற்பாடுகள் பண்ண முயன்று, மாப்பிள்ளை தேடி முடிக்கிறதுக்குள்ளேயே பொண்னு ஐயா இடத்துக்குப் போய்ச் சேர்ந்துட்டுது அது செத்துப்போச்சேன்னு அம்மை வருத்தப்படுறதுக்குப் பதில் சந்தோஷம்தான் பட்டா ! இப்படிப் பொட்டுப் பொடுக்குன்னு போற புள்ளெயை ரெண்டு வருசத்துக்கு முந்தி என் மகனுக் குக் கட்டிவச்சிருந்தா, அவன் இப்போ பெண்டாட்டியை பறி கொடுத்திட்டு நிற்க நேர்ந்திருக்குமே ; அந்த மூதி இந்த வீட்டு மருமகளா வந்து சேராததும் நல்லதாப் போச்சு என்று சொம்பவும் திருப்திப்பட்டுக் கொண்டாள். உ.ம். மனுஷப் பிறவிகளுக்கு மனம்னு ஒண்னு இருக்குதே, அதனேட போக்குகளும் இயல்புகளும் விசித்திரமானவைதான்.

மயிலேறும் பெருமாள் பிள்ளேயின் மனசில் பிர முவின் சின்ன உருவம் நிழலாடியது. கடைசியாக அவளே பார்த்த

பரவாடை-தாவணி நிலேயும் நிழலிட்டது.

- பதிமூணு வயசிலே பார்த்தது. அப்ப அழகாத்தான் இருந்தா. இப்போ அவள் உயிரோடு இருந்தால், அவளுக்கு அம்பத்துமூலு அம்பத்துநாலு வயசாகனும். அழகா இருப் பாள்லு சொல்ல முடியாது. அவளோடு ஒட்டை’யான காந்திமதி, அகிலாண்டம், சுந்தரம் எல்லாம் இப்ப இருக்கிற லெச்சனத்திலேதான் அவளும் இருந்திருப்பா. கன்னம் ஒட்டி, தலைமுடியிலே நரைவிழுந்து, வயதுக்கு மீறிய முதுமை படிந்து, குடும்ப வாழ்வின் சுமைகளும் மத்தியதர வர்க்கத்துப் பற்ருக்குறைப் பொருளாதாரச் சிக்கல்களும் அழுத்தியதாலே எலும்பும் தோலுமாகி, சாயம் போனது களேயும் கிழிந்ததுகளையும் கட்டிக்கொண்டு சோளத் தோட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/98&oldid=589342" இலிருந்து மீள்விக்கப்பட்டது