பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலந்துவிடும்போது! குளமாகிறது, எரியாகிறது, கடலாகிறது, பெருங்கடலும் ஆகிறது! அந்நிலையில் பெருமையோடு பயனும் விளைவிக்கிறது!

அய்ந்து கோடி மக்களைக் கொண்ட தமிழ்ச் சமுதாயத்தில் நான் ஒரு சிறுதுளி. அதை என்றும் மறந்ததில்லை. எவனோடு பணியாற்ற வேண்டுமோ-எவரை இயக்க வேண்டுமோ-அவர்களோடு சேர்ந்து நின்று. அவர்களில ஒருவனாகவே செயல்பட்டு வந்துள்ளேன்.

தொண்டர்களில் ஒருவனமாக அவர்களுக்கு முன்னே நின்று துணிந்து வழிநடத்திச் செல்லும் வாய்ப்புகள் வந்த போதெல்லாம். செய்தற்கு அரிய செய்ய முயன்றேன். ஆதரித்தோர் எண்ணற்றோர்; உடன் வந்தார் ஏராளம்; கை கொடுத்தோர் கணக்கில் அடங்கார். அவர்கள் பல நிலையினர்; பல போக்கினர்.

என் வாழ்க்கையை நினைக்கும்போதெல்லாம், பெற்றோர், உற்றார், ஊராருக்கு அடுத்து எனக்குக் கல்வி புகட்டிய ஆசிரியர்கள் நன்றியைப் பெறுகிறார்கள். அடுத்து, தமிழ்நாட்டு ஆசிரியப் பெரும்படை.

'தமிழ்நாட்டு ஆசிரியர்களுக்கு இணையில்லை' என்று இறும்பூது எய்தும் வகையில் என்னுடன் ஒத்துழைத்த நலப்பள்ளி ஆசிரியர்கள் செபஸ்டியான், முத்துசவரிமுதல், பல்லாண்டுகாலம் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களின் நண்பராக, வழிகாட்டியாக, ஞானத் தந்தையாக விளங்கிய மாஸ்டர் ராமுன்னி ஈறாகப் பல்லாயிரம், தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் தியாகப்படையாக அவதாரம் எடுத்து, பள்ளிப் பகல் உணவுத் திட்டத்தையும், சீருடை இயக்கத்தையும், பள்ளிச் சீரமைப்பு இயக்கத்தையும் செம்மையாக நடத்திக் காட்டி, வெற்றிமேல் வெற்றியைக் குவித்து, முதல் தொண்டனாம் என்னிடம் சேர்ப்பித்ததற்கு எப்படிப் போதிய அளவு நன்றிகூற இயலும்? அவர்கள் அப்படிச் செயல்பட உரிமை தந்த பள்ளி நிர்வாகிகளின் உதவியை நன்றியோடு நினைப்பதே, நெறி.

சாதி பாராமல், வருவாய் பாராமல் பள்ளியிறுதிவரை எல்லோர்க்கும் இலவசக் கல்வி அளிக்கும் அரசின் திட்டத்தை நிறைவேற்ற உதவிய, உயர்நிலைப் பள்ளி நிர்வாகிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் நான் பட்டிருக்கிற நன்றிக் கடன் மிகப் பெரிதாகும்.

'பொதுமக்களின் உதவியோடு, ஏழை மாணவ மாணவியருக்கு மாநிலம்தழுவிய பகல் உணவுத் திட்டம், பொதுமக்களைக் கொண்டே. ஊர்ப் பள்ளிகளைச் சீரமைக்கும் பள்ளிச் சீரமைப்புத் திட்டம் ஆகியவற்றைப் புதிதாகப் புனைந்து, வெற்றிகரமாக நடத்திவந்த தற்காக' இந்திய அரசு, எனக்குப் 'பத்மஸ்ரீ' விருது அளித்ததே அதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/10&oldid=1204952" இலிருந்து மீள்விக்கப்பட்டது