பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 நினைவு அலைகள் -- o-- - - பன்னிரண்டாம் வயது முதல் சில ஆண்டுகள்வரை, வீட்டிலேயே, விடியற்காலையில் தண்டால், தோப்புக்கரணம் முதலிய பயிற்சிகளை மேற்கொண்டேன். உடலை வளர்த்தேன். ஆண் பெண் இருபாலரும் உடலோம்ப வேண்டும். இது மிகமிக இன்றியமையாக் கடமை. 'உடம்பார் அழியின் உயிரார் அழிவர்: திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார் என்பது திருமூலர் திருமந்திரம். இது அந்தக் காலத்தில் என் காதில் விழவில்லை. 'காயமே இது பொய்யடா’, என்பதை மட்டுமே, பண்டாரங் களிடமிருந்து கேட்டேன். எனினும் உடல் வளர்ச்சியில் இயற்கையான நாட்டம் எழுந்தது. பச்சைக் கொண்டக்கடலையை இரவில், தண்ணிரில் ஊறவைத்துக் காலை உடற் பயிற்சிக்குப்பின் உண்பேன். --- காளைப் பருவத்தின் தொடக்கப் பருவத்தில், ஈராண்டு காலம், காஞ்சிபுரத்திலிருந்த நத்தப்பேட்டை வரை இருப்புப் பாதையோரம் நான்கு கல் தொலைவு மாலை நேரத்தில் நடந்து வருவது வழக்கம். நடைப் பழக்கத்தை எனக்கு ஊட்டியவர், திரு. குழந்தைவேலு முதலியார் என்பவர். என் வழிகாட்டிகளில் ஒருவர் நாடகச் செம்மல், பம்மல் சம்பந்த முதலியாரின் உறவினராகிய இவர், காஞ்சிக்குத் துணை ஆவணப் பதிவாளராக வந்தார். நான் குடியிருந்த வீட்டின் மற்றோர் பகுதியில் குடியிருந்தார். இவர் சென்னைப் பல்கலைக் கழகத்தில் இளங்கலைப்பட்டம் பெற்றவர். அதற்கு மேலும் அதிகமான ஆங்கிலப் புலமை பெற்றிருந்தார். முதலியார், டிக்கன்ஸ், ஸ்காட், ஷெல்லி, கீட்ஸ் ஆகியோருடைய ஆங்கில இலக்கியத்தில் மூழ்கி எழுந்தவர். உரையாடலுக்குச் சிறந்தவர். பட்டம் பெற்ற அதிகாரியாகிய இவர், பள்ளி மாணவனாகிய என்னைப் புறக்கணிக்கவில்லை. தன் தம்பியைப் போல் நடத்தினார். நாள்தோறும் உலாவச் செல்லும்போது, என்னையும் உடன் அழைத்துக் கொண்டு போவார். மேற்கூறிய ஆங்கில நூல்களிலிருந்து சுவையான பகுதிகளை உரைநடை உட்பட ஒப்புவித்துக்கொண்டே வருவார். மகிழ்ந்து கேட்பேன்; உணர்ந்து ஏற்கத் தவறிவிட்டேன். தன்னிடமிருந்த மூலநூல்களைக் கொடுத்துப் படிக்கும்படி என்னைத் துண்டுவார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/102&oldid=786842" இலிருந்து மீள்விக்கப்பட்டது