பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ து. சுந்தரவடிவேலு B1 அந்த வாய்ப்பினை நான், இன்னும் அதிகமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். காலம் அருமையானது; வாய்ப்போ மிகமிக அரியது. இவை கிடைக்கும்போது, வீணாக்கக் கூடாது. இன்று கற்கும் கல்வி நாளை பயன்படுமா என்று கேட்டுக் கோட்டை விடாதீர்கள். என்றைக்கோ ஓர் நாள், இருபது ஆண்டுகளுக்குப் பிறகோ, முப்பது ஆண்டுகளுக்குப் பிறகோ, அந்தக் கல்வி, முன்னின்று கற்றவரைக் காக்கும்; ஊக்கும்; வளர்க்கும். எனவே, வாய்ப்புக் கிடைக்கும்போது சிக்கெனப் பிடித்தல் நல்லது. தமிழோ, ஆங்கிலமோ, பிறமொழியோ எதுவாயினும் அதைக் கற்றுக் கொள்ளத் தவறிவிடாதீர்கள். எம்மொழிப் புலமை பெற்றாலும் செல்வழி நல்வழியாக அமையலாம். விருந்தோம்பல் உள்ள குடும்பம் எனக்குப் படிப்பார்வத்தை ஊட்டியவர்களில் திரு. குழந்தைவேலு முதலியாரும் ஒருவர். காஞ்சியிலிருந்து பல்லாவரம், வேலூர் முதலிய ஊர்களுக்கு மாறுதலான பிறகும் என்னுடன் தொடர்பு கொண்டு, எனக்கு ஊக்கமூட்டிய நல்லவர் திரு. முதலியார். 'நம் முதலியாரா?' என்று கேட்க அவருக்குத் தெரியாது. அந்நல்லார் காஞ்சிக்கு வந்தபோது புதுமாப்பிள்ளை. மைசூர் இராச்சியத்தில் பெரிய மருத்துவப் பதவியில் இருந்தவருடைய அருமை மகளை வாழ்க்கைத் துணைவியாகப் பெற்றிருந்தார். அம்மையாரின் தாய் வீட்டிலிருந்து அடிக்கடி தின்பண்டங்கள் வரும். வீட்டில் சுடும் பலகாரங்களுக்கும் குறைவில்லை. அக் குடும்பம் விருந்தோம்பலுக்குப் பெயர் போனது. எனவே எனக்கு நாள்தோறும் ருசியான தின்பண்டங்கள் கிடைக்கும். திருமதி குழந்தைவேலுவும் என்னைத் தம்பியாகவே நடத்தினார். 'Pனஆர் அம்மாவின் விளக்கெண்ணெய் தோசை சிேதலில் சித்தியும் பின்னர் பாட்டியும் எனக்காகக் குடித்தனம் '-டி, நான் படிக்க உதவினார்கள். G நடுவில் ஒராண்டு என் பாட்டி, நெய்யாடு பாக்கத்தில் தங்கும்படி காந்தது. அப்போது காஞ்சிபுரத்தில் ஒட்டல் உணவு வசதி வரவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/103&oldid=786843" இலிருந்து மீள்விக்கப்பட்டது