பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 6. அங்கே இருவேளையும் 'காப்பி கிடைக்கும். பகல், மாலை இருவேளை இரண்டு மூன்று பலகாரங்கள் கிடைக்கலாம்: சாப்பாடு இடைக்காது. உணவுச் சாலைகள் குறைவே யொழிய பலகாரக் கடைகளுக்குக் குறைவில்லை. அந்தக் கடைகளில் இட்லி, தோசை, வடை ஆகியவை மலிவாகக் இடைக்கும்; இடையில் அப்படிப்பட்ட பலகாரக்கடை ஒன்று இருந்தது. அந்தக் கடை, தோசைக்கும் மோர்க் குழம்பு வடைக்கும் பேர் போனது. தோசை சுடச் சுடக் கிடைக்கும். அது போல் கரைந்து போகும். காலணாவிற்கு ஒர் தோசை. அரையனாவிற்கு அருமையான மூன்று மோர்க் குழம்பு வடைகள். இரண்டு தோசைகளும் மூன்று மோர்க்குழம்பு வடைகளும் தின்றால் வயிறு நிரம்பிவிடும். இப்பலகாரங்களைத் தட்டுகளில் பரிமாறுவதில்லை; தாமரை இலைகளில் பரிமாறுவார்கள். வைத்து உண்ண மேசை கிடையாது. பெஞ்சுகளின் மேல் உட்கார்ந்து கையில் வைத்துக்கொண்டு உண்போம். நெருக்கடியான நேரங்களில் நின்றபடியே உண்ணவும் நேரிடும். பெரும்பாலான பலகாரக் கடைகளில் தனியா காப்பியே கிடைக்கும். ஒரு குவளை காப்பி காலணா. மாலை நேரத்தில் காலணாவிற்குக் கொண்டைக்கடலை சுண்டல் கிடைக்கும், காலணாவிற்கு இரண்டு முறுக்கு கிடைக்கும். மசால் வடையும் அதே விலை; கமகமவென்று மனக்கும். H H - - H -- |- நெய் பார்ப்பான் கடையும் என் இலட்சியமும் சிறியவனாக இருந்தபோது, காலையில் பழைய சோறு உண்டு விட்டுப் பள்ளிக்குச் சென்று வந்த நான் பன்னிரண்டாம் வயதிலிருந்து 'லகாரக்காரனாகி விட்டேன். நெல்லுமண்டித் தெரு, அய்யர் பலகாரக் கடையில் வாங்கி உண்ட 'லகாரங்களைப் போன்ற சுவையான, மணமானவற்றைப் பின்னர் *-ண்டதாக நினைக்கவில்லை. தான் குடியிருந்த நெல்லுக்காரத் தெருவிலேயே பல்லாண்டு ஒரு '-ாய்க்கடை இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/105&oldid=786845" இலிருந்து மீள்விக்கப்பட்டது