பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 நினைவு அலைகள் காஞ்சிபுரம் பூராவும் அந்த 'நெய்பார்ப்பான்கடை விளம்பரமானது. அது மாலை, இருட்டும் வேளையில்தான் திறக்கும். ஜாங்கிரி, லாடு', 'பால்கோவா இப்படியாகப் பத்து வகை இனிப்புகள் நெய்யில் செய்தவை கிடைக்கும். சிறு காராபூந்தி, பெருங் காராபூந்தி, முறுமுறு பகோடா ஆகிய மூன்று கார வகைகள் மட்டுமே விற்பார். காரப் பலகாரத்திற்குக் குறைந்தது ஒர் அனா வேண்டும். இரண்டனாவிற்குக் குறைந்த விலையில் இனிப்பு கிடையாது. சிறுவனாக இருந்தபோது அக்கடையின் பலகாரங்களைச் சாப்பிடுவது ஒர் இலட்சியம். எப்படியும் வாரத்தில் மூன்று நான்கு நாள்கள் எனக்கு அந்த இலட்சியம் கைகூடும். கோயில் பிரசாதங்கள் பலகாரக் கடைகள்போல, தெரு ஓரங்களில் பலர் இட்லி, தோசை சுட்டு விற்றார்கள். வெளியூர்களிலிருந்து வண்டி ஒட்டி வருவோர்க்குத் தெரு ஒர விற்பனையே வரப்பிரசாதம். பெரிய கோயில்களின் மடப்பள்ளிகளில், சோற்றுப்பட்டைகள் விற்பார்கள். பெருமாள் கோயிலில் புளியோதரையும் ததியோனமும் து TIது ஆங்: TLப், மற்றக் கோயில்களில் பொங்கல், சாம்பார் சோறு, தயிர்ச் சோறு ஆகியவை கிடைக்கும். திருவிழாக் காலங்களில் சர்க்கரைப் பொங்கல், அதிரசம் முதலிய பலகாரங்களும் கிடைக்கும். ஆனால் நீண்ட வரிசையில் நிற்கநேரிடும். என்பாட்டனாருக்குச் சாப்பாட்டுச் சுவை அதிகம்; பக்தியும் உண்டு. மாதத்திற்கு ஒரு முறையாகிலும் காஞ்சிக்கு வந்து, ஒன்றுக்கு மேற்பட்ட கோயில்களில் தரிசனம் செய்துவிட்டு, பிரசாதங்கள் வாங்கிக்கொண்டு வருவார். அவர் அடிக்கடி வரவேண்டுமென்று அப்போது வேண்டிக் கொள்வேன். ஒட்டல்களிலும் பலகாரக் கடைகளிலும் பார்ப்பனர்களுக்குத் தனியிடம். அந்தக் காலத்தில் ஆதிதிராவிடர்கள் பலகாரக் கடைகளில் நுழையக் கூடாது என்பது கடுமையான விதி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/106&oldid=786846" இலிருந்து மீள்விக்கப்பட்டது