பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ᏮᏮ நினைவு அலைகள் என்னைப் படுக்க வைத்தார். என் கைகளையும் கால்களையும் தம் ஆட்களைக் கொண்டு பிடித்துக் கொள்ளச் செய்தார். கட்டிக்குள் ஒர் ஊசியைச் செலுத்தி இழுத்தார். நான் பெருங் கூச்சலிட்டேன். பெரிய அறுவை சிகிச்சை தேவை என்றார். என் முகம் வெளுத்தது. அதைப் பார்த்த என் தந்தை, பின்னால் வருவதாகச் சொல்லிவிட்டு வெளியேறினார். கட்டணம் ரூபாய் பதினைந்தைக் கொடுத்துவிட்டே வந்தோம். அதற்கு மேல் சென்னையில் அலையாமல் காஞ்சிக்குத் திரும்பினோம். மறக்க முடியாத டாக்டர் காஞ்சியில் தனியாக மருத்துவமனை நடத்தி வந்த டாக்டர் ப.சு. சீனிவாசன் கெட்டிக்காரர் என்று சென்னையில் கேள்விப்பட்டோம். ஆகவே காஞ்சிக்குப் போனதும் அவரிடம் சென்றோம். நோய்க் கதையைக் கேட்டுவிட்டு, என் வாயைத் திறக்கச்சொன்னார். பற்களைக் கூர்ந்து பார்த்தார். கீழ்க் கடைவாய்ப் பல் சொத்தை. அதனால் வந்தது இக்கட்டி. அந்தப் பல்லை எடுத்துவிட்டால், இரண்டொரு நாள்களில் கட்டி, அதுவாகக் குணமாகிவிடும். வேறு மருந்து தேவை இல்லை, என்றார். பல்லைப் பிடுங்க வேண்டும் என்றதும் நான் பதறினேன். 'வலிக்கும் என்று பயப்படுகிறாயா? நான் கொறடாவால் திருகியே எடுப்பேன். அப்போது அதிகம் வலிக்கும். 'ஆனால் சென்னைக்கு இட்டுச் செல்லுங்கள். எழும்பூர் இரயில் நிலையத்திற்கு எதிரில்'கென்னத் தெரு’ என்ற தெரு இருக்கிறது. அங்கே பல் வைத்தியம் மட்டும் பார்க்கும் வெள்ளைக்காரர் ஒருவர் இருக்கிறார். 'அவரிடம் போனால், வலிக்காமல் மருந்து போட்டு எடுத்து விடுவார். இதோ இருக்கிற பட்டினந்தானே போய்விட்டு வாருங்கள். அவர் பல்லை எடுக்கும்போது எறும்பு கடிக்கிற மாதிரி கூட இராது" என்று சொன்னார். 'நல்லதுங்க! இதற்கு எவ்வளவு பீஸ்' என்றார் என் தந்தையார். 'ஒன்றும் வேண்டாமே! நான் ஒன்றும் செய்யவில்லையே' என்று சொல்லிக்கொண்டே, கட்டியை மெல்லத் துடைத்து, பொடி மருந்து தூவி, ஒட்டுப்போட்டார். மூன்று ரூபாய்களை அவர் மேசையில் வைத்துவிட்டுத் திரும்பினோம். அடுத்த நாள் மீண்டும் சென்னைக்குச் சென்றோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/108&oldid=786848" இலிருந்து மீள்விக்கப்பட்டது