பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடி வேலு 67 என் அங்க அடையாளமான தாடைக்கட்டி பண்டிதர் அருணகிரிநாதர் எங்களை எழும்பூர் பல் மருத்துவரிடம் அழைத்துக் கொண்டு போனார். மருத்துவரிடம் நடந்ததைச் சொன்னோம். அவ்வயதில் எனக்குப் பெரிய குடுமி உண்டு. அதை நீளமாகப் பின்னி, சுத்தமாக வைத்திருந்தேன். அதைப் பாராட்டிக்கொண்டே, ஏதோ தடவினார்; நொடியில் பல்லைப் பிடுங்கி விட்டார். அந்நொடி முள் குத்துவதுபோல் இருந்தது. மருந்து நீரால் வாய் கொப்பளித்தேன். பல் இருந்த இடத்தில் மருந்திட்டு அனுப்பிவிட்டார். 'கட்டிக்கு மருந்து வேண்டாம்' என்று ஆலோசனை கூறினார். எவ்வளவு கட்டணம்? ஐந்து ரூபாய்களே! அதைக் கொடுத்து விட்டு நிறைவோடு வெளியேறினோம். சில நாள்களில் கட்டி கரைந்தது. புண் முழுமையாகக் குணமாகி விட்டது. 'எளிதாகத் தீர்க்க வேண்டியதைப் பெரிதாக்கி, சிக்கலாக்கி, சங்கடப்படுவோர், சங்கடப்படுத்துவோர் பலர் உண்டு. எங்கோ ஒருவரே, எளிதாக நோய் போக்க வல்லவர் என்பதை அப்போது உணர்ந்தேன். கழுத்துக்குமேல் மருத்துவர்கள் கத்திவைப்பதற்கு எளிதாக ஒப்புக் கொண்டு விடக்கூடாது. டாக்டர் சங்கர நாராயணப் பிள்ளை சொன்னபடி அறுவை மருத்துவத்துக்கு ஆட்பட்டிருந்தால் எவ்வளவு பெரிய வேதனைக்கு ஆளாகி இருப்பேனோ? அந்தக் கட்டிக்கு மூலமாகிய சொத்தைப் பல்லை எடுக்காமல் விட்டுவிட்டு, கட்டியை அறுத்துத்தான் எப்படிக் குணமாக்கி இருக்க முடியும்? 7. வெவ்வேறு சூழல் தன்னம்பிக்கையும் தன்மானமும் தன்னம்பிக்கை வளர்ச்சியின் வேர், ஆணிவேரும் ஆகும். தன்மானமும் தேவை. இதுவே மனித வாழ்விற்கு மூச்சு. தன்மானம் அற்றவர், நரியாகப் புழுவாகப் பூச்சியாகப் பதுங்கி, நெளிந்து, ஒளிந்து, எப்படியோ பிழைப்பார். அத்தகைய வாழ்வு வாழ்வாகாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/109&oldid=786849" இலிருந்து மீள்விக்கப்பட்டது