பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெ. து. சுந்தரவ டிவேலு 69 இக்கூற்று, அகந்தையின் வெளிப்பாடோ, கற்பனையோ, கதையோ என்று ஐயுறக்கூடும். எப்போதோ ஒருமுறை நிகழும் அற்புதத்திற்கு உரிமை கொண்டாடுகிறேன் என்று திகைக்கக்கூடும்! என் கூற்று, அகந்தையின் புது உருவமல்ல; கற்பனையில் பிறந்த கதையல்ல; அற்புதக் கலப்பல்ல; இயற்கையாக முளைத்து; தானாக வளர்ந்தது. சமநிலை உணர்வு என்னில் இயற்கையாக முளைத்தது. காட்டில் முளைத்த வேங்கை மரமாக, ஒடிக்கப்படாமல், வெட்டப்படாமல், வளர்ந்தது. அந்த அனுபவத்தைப் பகிர்ந்தளிக்க முயலுகிறேன். கருவிலே திரு 'கருவில் திருவுடையார் என்பது உலக வழக்கு. விளையும் பயிர் முளையிலே' என்பது உழவர் வழக்கு. 'கருவில் திருவுடையார் என்று பலரைச் சுட்டிக்காட்டுகிறோமா? இல்லை. சிலரையாவது காட்டுகிறோமா? அதுவும் இல்லை. எப்போதோ ஒரு முறை, யாரோ ஒரு பெரியவரை வியத்தல் பற்றி இப்படி அடையாளம் காட்டுகிறோம். கருவில் திருஉடையார் என்பதற்கு மரபுப் பொருள் ஒன்று. புராணிகரின் பொருளைப் பலமுறை கேட்கிறோம். எத்தனையோ தலைமுறைகளாகக் கேட்கிறோம். 'நம்மாலே ஆவதொன்றும் இல்லை' என்னும் கவலைப் போக்கை மேலோங்க விட்டுவிடுகிறோம். 'திருஉடைமை எப்போதோ கிடைக்கும் பிச்சையல்ல. பல கோடியில் ஒருவருக்கே கிட்டும் பரிசல்ல. பலரும் அடையக்கூடியதே திருவுடைமை. வீடுதோறும் ஒளிவிடக்கூடியதே இது. தெரிந்த முயற்சியால் பெறுவது இது. முயற்சியே திருவினையாக்கும். செயல்கள், முயற்சியின் பாற்பட்டவை என்று சொல்லத் தேவையில்லை. எண்ணுதலும் முயற்சியின்பாற்பட்டதாகும். எண்ணம் நுண்ணியது; மிகமிக துண்ணியது; ஆயினும் வலியது. மின்னலையின் ஆற்றலை ஒப்பது. முன்னர் நினைவுபடுத்திய உலக வழக்கும் உழவர் வழக்கும் -யிரியல் உளவியல் உண்மைகளை மிகமிக நுட்பமாகக் காட்டுவன. குழந்தையே குமரனாகிறான். குமரனே, துணைவனாகிறான்; இடும்பத் தலைவனாகிறான்; சமுதாயத்தின் நாடியாக நரம்பாகச் షా -- -- 'சயல்படுகிறான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/111&oldid=786852" இலிருந்து மீள்விக்கப்பட்டது