பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 நிை னவு அலைகள் - ஊர்த் தலைவனாக, நாட்டுத் தலைவனாக, வளர்கிறான். பெரிய மரத்தின் கப்பும் கிளையும் இலையும் பட்டையும் பூவும் கனியும் சிறு விதையில் அடங்கிக் கிடக்கிறது. அதைப்போல், கால நீட்டத்தில் எதை எதையோ சாதிக்கப் போகும் மக்களின் நுண்மாண் நுழைபுலம், செயற்கரிய செய்யும் ஆற்றல், பிறர்க்கென வாழும் நற்பண்பு, கைம்மாறு வேண்டாக் கடப்பாடு ஆகியவை கருவிலேயே உறங்கியுள்ளன. சூழ்நிலையும் குழந்தை வளர்ச்சியும் விதை முளைக்க ஏற்ற மண்ணும் சூழலும் தேவை. முளைத்த செடி செழித்து வளர, பாதுகாப்பும் பராமரிப்பும் வேண்டும். ஒளியின் ஏற்றக் குறைவு, ஈர வேறுபாடு, வெப்ப தட்பம், தாவரத்தின் வளர்ச்சியை இயக்குகின்றன. பிற்கால மனிதனின் கூறுகள் அனைத்தும் கருவுற்றபோதே உயிர்பெற்று விடுகின்றன. சிசு, தாயின் வயிற்றில் தவங்கிடக்கும்போதே இயல்புகளை, போக்குகளைப் பெறுகின்றது. பிறந்தபிறகு, அவை துளிர்விடுகின்றன. சிறு பிராயத்தில் வளரும் சூழல், ஆற்றல் மிக்கது. கூடும் தோழர்களும் இயல்புகளையும் போக்குகளையும் வளர்க்கவோ, மாற்றவோ, நசுக்கவோ, பயன்படுகிறார்கள். பிறந்து ஐந்து வயதானபிறகே, பையனோ, பெண்ணோ அறிவு பெறத் தொடங்குவதாகக் கருதவேண்டாம். இங்கும் அங்கும் நடமாடத் தெரியும்வரை, குழந்தைகள் மரக்கட்டைகள் அல்லர். மழலை பேசும்வரையும்கூட, அவர்கள் கட்டைகள் அல்லர். பிறந்தபோதே, குழந்தை காணத் தொடங்குகிறது. காட்சியே அறிவின் தொடக்கம். அம்மாவை அடையாளம் கண்டு கொள்ளல் ஒரு நிலை; அத்தையை, அப்பாவை அடையாளம் காண்டல், சற்று வளர்ந்த நிலை. பலரை அடையாளம் காணுதல் தொடர்ந்து வளரும் நிலை. கேட்கத் தொடங்கும் குழந்தைக்கு முதலில் அம்மாவின் குரலே தெரியும். மெல்ல, மெல்லப் பலரின் குரலைத் தெரிந்து கொள்கிறது. அம்மாவின் அன்புக் குரலுக்கும் வெறுப்புக் குரலுக்கு, வேறுபாட்டை உணரத் தொடங்குகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/112&oldid=786853" இலிருந்து மீள்விக்கப்பட்டது