பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 71 இப்படிக் குரல்களைப் புரிந்துகொள்ளத் தொடங்கி, சொற்களின் உச்சரிப்பின் வேறுபாடுகளை உணர்ந்து, அறிவில் வளர்கிறது. எனவே சின்னஞ்சிறு வயதில்குழந்தை பெறும் சூழலும் நட்பும் வாய்ப்புகளும் வளர்ச்சிக்கு, பெரும் வளர்ச்சிக்குத் துணையாகலாம்; அல்லது மட்டியாக்கக் காரணமாகலாம். காந்தியம் பேசும் சிறுவன் என் வீட்டில், மூன்று வயதுப் பையன் ஒருவன் வளர்கிறான். அவன் அன்றாடம் காலையிலேயே செய்தித் தாள்களைப் பார்க்கிறான். அவற்றில் பல படங்களைக் காண்கிறான். நாள்தோறும் ஒவ்வொரு படத்தையும் எனக்குக் காட்டுகிறான். இவற்றை விளக்கும்படி கேட்கிறான். 'விக்ராண்ட்' கப்பலைக் கண்டான். அதன்மேல் ஒரு உண்மையில் பக்கம், விமானம் இருப்பதைப் பார்த்தான். 'மீனம்பாக்கத்தில் இருப்பது, கப்பல்மேல் இருக்குமா?" என்றான். 'பக்கத்தில் நிற்கும் அம்மா யார்?' என்றான். 'ஆளுநரின் மனைவி' என்றேன். 'பக்கத்தில் இருப்பவர் ஆளுநரா?' என்பது அடுத்த கேள்வி. "ஆம்" என்பது என் பதில். 'அருகில் வெள்ளை உடையில் உயர்ந்து நிற்பவர் யார்?' என்று அறிய இவன் துடித்தான். 'விக்ராண்டின் தலைவன்' என்று கேள்விப்பட்டதும், அவர் கையில் நீளமாக வைத்திருப்பதைக் காட்டி, 'அது என்ன?' என்று அறிந்துகொள்ள விரும்பினான். "வாள்' என்று கேள்விப்பட்டதும், "அதைக் கொண்டு வெட்டு வாரா?' என்று பதற்றத்தோடு கேட்டான். 'சண்டை வந்தால், பகைவன் நேரே கொல்ல வந்தால், வெட்டுவார்; தன்னைக் காப்பாற்றிக் கொள்ள' என்ற பதிலைக் கேட்டான். 'சண்டை வராதிருக்கட்டும் ஒருத்தரை ஒருத்தர் வெட்டா திருக்கட்டும் என்று காந்தியம் பேசிவிட்டான். காந்தியம் என்னும் பெயர் அவனுக்குத் தெரியாது. அவ்வுணர்வோ, சிறுவனிடம் இயல்பாக எழுந்தது. " ஆந்தை எப்படி இருக்குமென்று அவனுக்குத் தெரியாது. *வலுக்கும் கோழிக்கும் வேறுபாடு தெரியாது. எந்தத் தழை *கட்டுக்குப் பிடித்தது? அவன் அறியான். பொன் வண்டு 'ார்த்ததில்லை. மரவட்டை தெரியாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/113&oldid=786854" இலிருந்து மீள்விக்கப்பட்டது