பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 நினைவு அலைகள் ஏழைக்குழந்தையின் உலகம் அதே நேரத்தில், என் வீட்டிற்கு எதிரில் ஒரு நிகழ்ச்சி. வயதானவர் ஒருவர், தொரட்டால், தெருமரத்தின் கிளைகளை ஒடிக்கிறார். பக்கத்தில் மூன்று வயது சிறுமி, கிளை விழவிழ, விரைந்து எடுத்துக் கொண்டு ஒடுகிறாள். வாத்து ஒடுவதுபோல் குடுகுடு என்று ஒடுகிறாள்; நொடியில் திரும்பிவிட்டாள். அடுத்து, ஒடிந்து வீழ்ந்த மற்றொரு கிளையை எடுத்துக்கொண்டு ஒடினாள். சிறுமி நொடியில் திரும்புவதைக் கண்டு வியந்தேன். அவள் ஒடிய பக்கம் திரும்பினேன். கண்டது என்ன? அவளுடைய அண்ணன் - நான்கு வயது இருக்கும் - நடு வழியில் கிளைகளைப் பெற்றுக் கொண்டான். ஒடினான். சிறிது தூரத்தில் நின்ற தன் அண்ணனிடம் கொடுத்துவிட்டுத் திரும்பவும் பறந்து வந்தான். இப்படி பத்துப் பதினைந்து கிளைகளை, அப்பனும் மூன்று குழந்தைகளுமாக ஒடித்துக்கொண்டு போனார்கள். இது, நான் அடிக்கடி காணும் காட்சி. ஏழைக் குழந்தைகள் ஆடுகளோடு வளர்கிறார்கள். அவைகளைப் பற்றி நிறையத் தெரியும். கோழி அடைகாப்பது அவர்களுக்குப் புரியும். நொடியில் புரியும். பொன் வண்டோடு விளையாடும். மரவட்டைக்கு அஞ்சாது. ஏழையின் உலகமும் அவனுடைய குழந்தைகளின் உலகமும் வேறு. என்.உறவினர்களுடைய உலகம் வேறொன்று. =இரண்டையும் ஒன்றாகச் சோதித்து, தகுதியை அளவிடப் போகிறது நம்முடைய சமுதாயம். == வாழ்வும் வளமும் சிலருக்கு; வறுமையும் அறியாமையும் பலருக்கு: செய்யத் தகாதனவற்றைச் செய்தே வாழும் நிலை பலருக்கு. எத்தனை காலம் நீள்வன இவை? இது போகட்டும். தாயும் குழந்தையும் குழந்தை கருவில் இருக்கும்போதே, தாய் கவனமாக இருக்க வேண்டும். தாய் உண்ணும் உணவு, குழந்தைக்கு வலிவூட்டக்கூடும் அல்லது மெலிவிக்கக்கூடும். உணவுக்கேற்ற இயல்பு என்பது இயற்கைப் பொதுவிதி. எனவே தாயின் உணவு குழந்தையின் இயல்பைப் பாதிக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/114&oldid=786855" இலிருந்து மீள்விக்கப்பட்டது