பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 நினைவு அலைகள் பரந்த உள்ளமும் விரிந்த சிந்தனையும் வானத்திலிருந்து திடீரென வீழ்பவையல்ல! இவை, நிலம் வெடித்து வெளியாகா. ஒவ்வொரு குடும்பமும் பொறுமையோடு, முன் யோசனையோடு, தக்க அறிவோடு, அணைத்து அனைத்து மேற்கூறியவற்றைப் பயிரிட வேண்டும். என்னைக் கருவுற்றிருந்த காலத்தில், என் தாய் எதற்கும் குறை பட்டதாகவோ, புண்பட்டதாகவோ, நொந்து கொண்டதாகவோ நான் கேள்விப்படவில்லை. வயிற்றிலே சரியான சூழலிலே வளர்ந்திருப்பேன் என்று ஊகிக்கிறேன். பிறந்த பிறகு.? மூத்த பிள்ளை; செல்லப் பிள்ளை; உறவினர்களில் பெரிய வீட்டுப் பேரன். எல்லார் அன்பையும் முழுவதுமாகப் பெற்றவன். 8. சாதி இழிவை உணர்ந்தேன் என் கிராமத்துச் சூழல் ஊராரோ புறநானூற்றுக் காலத்தை நினைவுபடுத்தியவர்கள்; சான்றோர்கள்; அடிதடிக்குப் போகாதவர்கள்; குத்து வெட்டைக் காணாதவர்கள்: உருட்டும் புரட்டும் அறியாதவர்கள். உறவினர்கள் மட்டுமல்ல; ஊரார் அனைவருமே அப்படி. mo வேளாளர் தெருவில், அவர்கள் வீட்டுக்கு அடுத்துக் குடியிருக்க வேண்டியிருக்கிறதே என்று எங்கள் ஊர் குருக்கள் குடும்பங்கள் முணுமுணுத்ததில்லை. எங்கள் உறவினரும் யாரையும் கட்டிவைத்து அடித்து வஞ்சம் தீர்த்துக் கொண்டதில்லை. தனித்தெருவில் குடியிருப்பதைப் பற்றி அக்காலத்தில் எங்களூர் குடியானவர்கள் புண்படவில்லை. ஆதிதிராவிடர்கள் தனியாக ஒதுங்கி வாழ்வதைப்பற்றி வேதனைப்படவில்லை. அவரவர் நிலையை அவரவர் ஏற்றுக்கொண்டு இருந்தார்கள். ஆகவே, என் சிறு வயதில் சாதி ஏற்றத்தாழ்வு கொடுமையானது, அநீதியானது என்று எண்ணவோ, சிந்திக்கவோ நேரவில்லை. சில பிரிவினரைத் தொடக்கூடாது என்று பெரியவர்கள் நடந்து கொண்டார்கள். நானும் சிந்தியாமலே நடந்து கொண்டேன். சிலவேளை, நெய்யாடு பாக்கத்திலிருந்து வாலாஜாபாத்வரை யாராவது ஒர் ஆள் என்னைத்துக்கிக்கொண்டு போக நேரிடும். வாலாஜாபாத்தில், நான்கட்டியிருந்த வேட்டியையும் போட்டிருந்த சொக்காயையும் அந்த ஆள் கழற்றி, ஆற்றங்காலில் நனைத்துவிட்டு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/116&oldid=786857" இலிருந்து மீள்விக்கப்பட்டது