பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 நினைவு அலைகள் சாதி பற்றி எண்ணத் துண்டிய நிகழ்ச்சி என்னுடைய பதினோராவது வயதில் இது நடந்தது. குதிரை வாகனத்தன்று, மாலை ஏழு மணி அளவில், என் தாயார் என்னை அழைத்துக் கொண்டு ஆற்றுக்குச் சென்றார். சாமி வருவதற்கு முன்பு, கூட்டம் சேர்வதற்கு முன்பு எனக்குத் தின்பண்டங்களை வாங்கிக் கொடுக்கவேண்டுமென்பது அவருடைய எண்ணம். நாங்கள் போனபோது மிட்டாய்க் கடையில் கூட்டமில்லை. தட்டுகளில் உள்ளதைக் காட்டி, எனக்கு என்ன வேண்டும் என்று என் தாயார் கேட்டார். நான், எட்டி நின்று காட்டவில்லை; தொட்டுக் காட்டினேன். சர்க்கரைப் பாகு பூசிய இனிப்பு சேவு வேண்டுமென்று அதைத் தொட்டுவிட்டேன். நொடியில் சத்திரத்து அய்யர் உருத்ரமூர்த்தியாகி விட்டார். கண்கள் கனல் கக்கின. நான் தொட்டதால் பண்டங்கள் தீட்டுப்பட்டு விட்டதாம், அதை அவன் எப்படித் தொட முடியும் என்று குதித்தார். மடமடவென்று சுடுசொற்களைக் கொட்டினார். சாமி, அறியாத பிள்ளை தப்புச் செய்துவிட்டது, மன்னித்து விடுங்கள்; உங்களுக்கு நஷ்டம் வேண்டாம். அவ்வளவையும் நானே, விலைகொடுத்து வாங்கிக் கொள்கிறேன்' என்று பணிவோடு அமைதிப்படுத்த முயன்றார், என் அன்னையார். அது எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றுவதுபோல் ஆயிற்று. அய்யருடைய சொற்களில் மேலும் அனல் வீசியது. என் தாய் அதுவரை, யாரிடமும் அத்தகைய சுடுசொற்களைக் கேட்டதில்லை. எனவே, பதறினார். நானும் துடித்தேன். நெருப்பிலே போட்டு வாட்டுவதுபோல் இருந்தது. என்ன பரிகாரம் என்பதும் தெரியவில்லை. அவ்வேளை, யாரோ ஒருவர், மிட்டாய்க் கடையை நெருங்கினார். திரும்பிப் பார்த்தேன். எங்கள் ஊர்க் குடியானவர் மிட்டாய் வாங்குவதற்கு வந்தார். மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் 'ஏன்யா இன்னா நெனச்சிக்கிட்டு பேசெறெ! நானும் கேட்டுக்கிட்டுதான் நிக்கிறேன். பெரியம்மா, பணிவா பேசப் பேச, நீ என்னமோ மேலே மேலே போறியே! - 'நாலு காசு சம்பாதிக்க, ஊரை விட்டு ஊர் வந்திருக்கே அதை மறந்திட்டே வாய்க்கு வந்தபடி உளர்றே என்னா திமிரு உனக்கு!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/118&oldid=786859" இலிருந்து மீள்விக்கப்பட்டது