பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதலமைச்சர் அண்ணா அவர்கள், தில்லியிலிருந்த என்னை அழைத்து, தமிழக அரசின் தலைமைக் கல்வி ஆலோசகர் மற்றும் கூட்டுச் செயலராகவும், உயர்கல்வி, முதியோர் கல்வி, பொது நூலகங்கள் ஆகியவற்றின் இயக்குநராகவும் உயர்த்தினார். அப் பண்பாளருக்குப் பெரிதும் நன்றியுடையேன்.

முதலமைச்சர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள், என்னை இருமுறை, சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தராக்கி மகிழ்ந்தார்கள். அந்நிலைக்கேற்ற உரிமையும் ஆதரவும் தாராளமாகத் தந்தார்கள். அவருக்கு என்றும் பசுமையான நன்றியுடையேன்.

முதலமைச்சர், டாக்டர், எம்.ஜி.இராமசந்திரன் அவர்கள், என்பால் தொடர்ந்து அன்பைப் பொழிந்து வருகிறார்கள். அவர் காட்டி வரும் அன்புக்குப் பெரிதும் நன்றியுடையேன்.

இத்தகைய பெரியவர்கள் வாயிலாக, சமுதாயம் பெரும் பொறுப்புகளையும் வாய்ப்புகளையும் உரிமைகளையும் வழங்கிற்று. அப் பொறுப்புகளை நிறைவேற்றுகையில் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு, குடியரசுத் தலைவர் டாக்டர் இராசேந்திர பிரசாத் ஆகியோரின் பாராட்டைப் பெறும் நல்வாய்ப்புக் கிட்டிற்று.

'சென்னை மாகாணத்தைப் பின்பற்றி, ஊர்ப் பொதுமக்களின் உதவியைக் கொண்டு, பகல் உணவுத் திட்டத்தை, பள்ளிச் சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி' பிரதமர் நேரு எல்லா மாநில முதலமைச்சர்களுக்கும் நேர்முகக் கடிதம் எழுதினார். இதைவிட ஒரு பெரிய, பாராட்டு ஏது? இந்தப் பாராட்டல்லவா. தமிழ் நாட்டுக் கல்வித் துறையையும் ஆசிரியர்களையும் தேனிக்கள்போல் செயல்பட வைத்தது.

'கிராம மக்களைக் கொண்டே, கிராமங்களைச் சீரமைக்கும் பணியில், காந்தி அடிகளாரும் நானும் இந் நூற்றாண்டின் முப்பதுகளில் ஈடுபட்டோம். அத்தகைய முயற்சியில் ஈடுபட்டுச் சென்னை மாநிலக் கல்வித் துறை வெற்றி பெற்றுள்ளது' என்று டாக்டர் இராசேந்திர பிரசாத், வேலூர் பள்ளிச் சீரமைப்பு மாநாட்டில் உலகறியப் போற்றினார். அதை நினைக்க, நினைக்க இனிக்கிறது.

குடியரசுத் தலைவர்கள் டாக்டர் இராதாகிருஷ்ணன், டாக்டர் வி.வி. கிரி ஆகியோரின் அன்பைப் பெற்றது. என் நல்வாய்ப்பாகும்.

பன்னிரண்டு ஆண்டுகளாக, இந்திய சோவியத் பண்பாட்டுக் கழகம் என்னும் நாடு தழுவிய அமைப்பின், தமிழ் மாநிலக் குழுவிற்குத் தலைவனாக இயங்குகிறேன். இந்தியர்களுக்கும். சோவியத் மக்களுக்குமிடையில் நட்பை வார்க்கும் பணியில் தமிழக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/12&oldid=1205203" இலிருந்து மீள்விக்கப்பட்டது