பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 நினைவு அலைகள் 'அவர் சீவரம் சந்தைக்கு வந்தா, உன் சத்திரத்துக்கு வருவார். உயரமா, உச்சிக் குடுமியோடே இருப்பார். மேலேதும்பைப்பூ போன்ற துண்டு மட்டும்தான் போட்டு வருவார்....' எங்களுர்க்காரரின் பேச்சை இடைமறித்தார் அய்யர். 'ஐயா, என் போராத வேளை அவர் மகா தர்மிஷ்டராச்சே என்ன தங்கமான குணம் அவங்க ஆசாரம் யாருக்கு வரும்? 'அம்மாதான், வீட்டுக்காரர் பேரைச் சொல்லமாட்டாங்க! ஏன் அப்பா, நீ ஒரு வார்த்தை சொல்லியிருக்கக் கூடாது? இவ்வளவுக்கு வீணாகப் பேச்சு வளர்ந்திருக்காதே! 'போனது போகட்டும்மா. தெரியாமே பேசிட்டேன். இதோடு விட்டு விடுங்கம்மா. இன்றைக்கு நான் புறப்பட்டு வந்த வேளை அப்படி! நானே வந்து, வேனுமானாலும் முதலியாரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். சரிதானா அம்மா' என்று குழைந்தார்.அய்யர். பிறப்பில் உயர்வு தாழ்வு இருக்கலாமா? எங்களுக்கு வேண்டிய தின்பண்டங்களை அந்த அய்யரிடமே வாங்கிக்கொண்டு வீடு திரும்பினோம். என் மனம் வாடியிருந்தது; பண்டத்தை நாடவில்லை. மறுநாள் உண்பதாகச் சொன்னேன். தாயார் அவற்றைப் பத்திரப்படுத்தி வைத்தார். உள்ளத்தில் ஏக்கம்; பெரிய குழப்பம். பல மணித்துளிகளுக்குப் பிறகு, என்னிடம் சிறிது தெளிவு பிறந்தது, சிந்தனை வேகமாக ஓடிற்று. 'குளித்துவிட்டு வெள்ளை உடை உடுத்திக் கொண்டுதானே சென்றேன். அழுக்காகவா இருந்தேன்? தலையைக் கூட ஒழுங்காக வாரிக் கொண்டிருந்தேனே. கையிலும் அழுக்கில்லை. கையால் தொடவில்லையே? விரலின் துனியால் அல்லவா தொட்டேன். அதுவா தீட்டு ? விரல் முனையில் நஞ்சா இருந்தது? எதற்காக இவ்வளவு கடுஞ் சொற்கள் அறியாமற் செய்த சிறு பிழைக்கு என் தாய் எத்தனை கடுஞ்சொற்களைக் கேட்பது? என்னால் அல்லவா வசைச்சொல்; அம்மாவுக்கு இந்த அவமானம்? 'சாதித் திமிர் எப்படியெல்லாம் ஆணவத்துடன் குதிக்கிறது? 'துய்மை யிலும், செல்வத்திலும் சத்திரத்து அய்யருக்கு மிஞ்சியிருந்தும் இப்படிச் சின்னத்தனப்படுவானேன்? அய்யர் உயர்ந்த சாதி; நாம் சின்ன சாதி என்னும் வழக்கத்தாலா? 'பிறவி, உயர்வு தாழ்வு முறை இருப்பதால் அல்லவா, கண்டவரிடம் அவமானப்பட வேண்டியிருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/120&oldid=786862" இலிருந்து மீள்விக்கப்பட்டது